Viruman Box Office Collection: 2வது நாளிலும் தட்டித் தூக்கிய விருமன்.. அதிதி ஷங்கர் அதிர்ஷ்டமா?
சென்னை: சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கி உள்ள விருமன் படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
Recommended Video
கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாகி உள்ள விருமன் படத்தின் முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாள் வசூல் அதிகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒட்டுமொத்தமாக விருமன் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

கலக்கிய கார்த்தி
இயக்குநர் முத்தையாவின் வழக்கமான டெம்ப்ளேட் ஸ்டோரி என்றாலும், அதில் நடிகர் கார்த்தியின் கலகலப்பான நடிப்பு ரசிகர்களை படத்தை பார்க்கத் தூண்டுகிறது. ஆக்ஷன், காமெடி, டான்ஸ் என இந்த படத்தில் இறங்கி நடித்திருக்கிறார் கார்த்தி. இதே எனர்ஜியுடன் வந்தியத்தேவனாக கார்த்தி எப்படி மிரட்டப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் பொன்னியின் செல்வன் படத்துக்கும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதிதியின் அதிர்ஷ்டம்
இயக்குநர் ஷங்கர் இயக்கிய படங்கள் என்றாலே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து விடுவார்கள். இந்நிலையில், முதல் முறையாக அவரது மகள் அதிதி ஷங்கர் எப்படி நடித்து இருக்கிறார் என்பதை பார்க்கவே ரசிகர்கள் தியேட்டருக்கு திரண்டு வருகின்றனரா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தேனாக தித்திப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் அதிதி ஷங்கர்.

முதல் நாள் வசூல்
25 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட விருமன் படத்திற்கு முதல் நாளிலேயே 7 முதல் 8 கோடி வரை வசூல் வந்தது படக்குழுவையும் தயாரிப்பு நிறுவனத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. போட்டியாக வெளியான அமீர்கானின் அந்த படத்துக்கு வரவேற்பு இல்லாத நிலையில், ஏகப்பட்ட தியேட்டர்களில் கூடுதல் காட்சி விருமன் படத்துக்கு கிடைத்துள்ளது.

இரண்டாவது நாள் வசூல்
சனிக்கிழமையான நேற்று முதல் நாளை விட அதிக வசூல் வந்துள்ளது விருமன் படக்குழுவினரை வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு வெளியான பல படங்கள் இரண்டாவது நாளில் பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்த நிலையில், விருமன் திரைப்படம் இரண்டாவது நாளில் 8 முதல் 9 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தமாக 17 கோடி வரை இந்த படம் இரண்டே நாட்களில் வசூல் செய்துள்ளது.

தங்க மழை
ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தியேட்டர்கள் திருவிழா போல காட்சியளிக்க உள்ளன. மேலும், நாளை சுதந்திர தின விடுமுறை என்பதால் விருமன் காட்டில் தங்க மழை தான் என்றே சொல்லலாம். முதல் வார முடிவில் விருமன் படம் 30 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











