Karthi: சாங் சூட்டிற்காக காஷ்மீர் செல்லும் கார்த்தி.. எந்தப்படம் தெரியுமா?

சென்னை: நடிகர் கார்த்தி -ராஜூ முருகன் கூட்டணியில் உருவாகியுள்ளது ஜப்பான் படம். கார்த்தியின் 25வது படமாக இந்தப் படம் வெளியாகவுள்ளது.

கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. வரும் தீபாவளியையொட்டி படம் ரிலீசாகவுள்ளது.

Actor Karthi and Japan movie team planned for Song shooting in Kashmir

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் தன்னுடைய கார்த்தி26 படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

ஜப்பான் படத்தின் பாடல் சூட்டிங்கிற்காக காஷ்மீர் செல்லும் கார்த்தி: நடிகர் கார்த்தி சிறப்பான இயக்குநர்கள் மற்றும் சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் தன்னை சிறப்பாக பொருத்தி படத்தின் வெற்றியை உறுதி செய்து வருகிறார். கைதியாக இருந்தாலும் மிரட்டுகிறார். கிராமத்து கேரக்டர்களிலும் ஜொலிக்கிறார். 45 வயதான போதிலும் இன்னமும் கல்லூரி மாணவன் கேரக்டரில் நடிக்கும் வகையிலும் தன்னுடைய லுக்கையும் பிட்னசையும் வைத்துள்ளார் கார்த்தி. கடந்த ஆண்டு கார்த்திக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. அவரது நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் சிறப்பான வெற்றியை கொடுத்தன.

இந்த மூன்று படங்களும் மூன்று வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி கார்த்தியை ரசிகர்களிடையே சிறப்பாக வெளிப்படுத்தியது. குறிப்பாக மணிரத்னத்தின் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த வரலாற்று படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் அவரது வந்தியத் தேவன் கேரக்டர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தை போலவே முன்னதாக வெளியான விருமன் மற்றும் தீபாவளியையொட்டி வெளியான சர்தார் படங்களும் அவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்து வசூல்மழையை பொழிந்தன. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கார்த்திக்கு சிறப்பாகவே அமைந்துள்ளன.

இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படமும் கார்த்திக்கு சிறப்பாக கைகொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. இந்தப் படம் வரும் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளது. படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி கார்த்தியை வித்தியாசமாக ரசிகர்களுக்கு காட்டியுள்ளது. படமும் சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். மேலும் நடிகர் சுனில் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இயக்குநர் விஜய் மில்டனும் இந்தப் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. படத்திற்கு இசை அசுரன் என பெயரெடுத்துள்ள ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் டயலாக் போர்ஷன்கள் நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக கார்த்தி உள்ளிட்டவர்கள் காஷ்மீருக்கு செல்லவுள்ளனர்.

காஷ்மீரில் இந்தப் படத்தின் பாடல் காட்சி தொடர்ந்து 8 நாட்கள் எடுக்கப்பட உள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுடன் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாகவும் இந்தப் பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கிராமத்து பின்னணியில் இரண்டு பாடல்கள் அமைந்துள்ளதாகவும் படம் கார்த்தி -ராஜூ முருகன் இருவருடைய ஸ்டைலின் கூட்டாக அமைந்துள்ளதாகவும் முன்னதாக படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X