திருப்பதி லட்டு உங்களுக்கு ஜோக்கா.. யோசிச்சி பேசுங்க.. பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி!
சென்னை: திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டது பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், நடிகர் கார்த்தி லட்டு குறித்து பேசி இருந்தார். இதற்கு ஆந்திர துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்த நிலையில் நடிகர் கார்த்தி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
கார்த்தியின் 27வது படமாக உருவான மெய்யழகன் படத்தை பிரேம் குமார் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவான இப்படம் செப்டம்பர் 27ந் தேதி வெளியாக உள்ளது.படம் வெளியாக இரண்டு நாளே இருப்பதால், படத்தின் ப்ரோமோஷன் வேலை படு பிஸியாக நடந்து வருகிறது. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளியாக உள்ளது. தெலுங்கில் இப்படத்திற்கு ’சத்யம் சுந்தரம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்திக் பேச்சு: இதையடுத்து, ஹைதராபாத்தில் நேற்று படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்றது. இதில், நடிகர் கார்த்தி, இயக்குநர் பிரேம் குமார் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில், தொகுப்பாளினி கார்த்தியிடம்’உங்களுக்கு லட்டு வேணுமா?’ என்று கேட்டார்.அதற்கு கார்த்தி இப்போ லட்டு குறித்து பேச வேண்டாம், அது சென்சிடிவ்வான விஷயம், அது குறித்து இப்போ பேச வேண்டாம் என்றார். இதைக்கேட்டு அரங்கில் இருந்த பலர், கைத்தட்டி சிரித்தனர்.
கண்டித்த பவன் கல்யாண்: நடிகர் கார்த்தியின் பேச்சை கண்டித்த ஆந்திர துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண், “சினிமா நிகழ்வில் லட்டு வைத்து கிண்டலடித்து பேசுகிறார்கள். சென்சிடிவ்வான விஷயமாம், ஒருபோதும் அப்படி சொல்லாதீர்கள், நடிகர்களுக்கு மரியாதை கொடுக்கிறேன். ஆனால், சனாதான தர்மம் என வரும் போது பேசும் வார்த்தையை நூறுமுறை யோசித்துத் பேச வேண்டும் என கண்டித்திருந்தார்.
பகிரங்க மன்னிப்பு: இந்த விஷயம் இணையத்தில் புதாகரமானதைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிரங்க மன்னிப்பு கோரி உள்ளார். அதில், பவன்கல்யாண் சார், உங்களுக்கு ஆழ்ந்த மரியாதையுடன், எதிர்பாராத தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை அன்புடன் பின்பற்றுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
பெரும் சர்ச்சை:ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த ஆட்சியில் திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் இருப்பதாக தெரிவித்ததையடுத்து, லட்டு பிரசாத சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் நெய் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியது. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு கலந்திருந்தது ஆய்வக பரிசோதனையில் தெரியவந்தது.
பரிகார விரதம்: மாட்டுக்கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு சேர்க்கப்பட்டு லட்டு தயாரிக்கப்பட்டதால் திருப்பதி கோயில் சமையல் அறையின் புனிதம் கெட்டுவிட்டதாக புரோகிதர்கள் தெரிவித்துள்ளனர். அனைவரும் நம்பிக்கை வைத்த கடவுள் விஷயத்தில் இப்படி செய்து மகா பாவம் செய்துவிட்டார்கள் ஒட்டுமொத்த கொந்தளித்து வருகின்றனர். இந்த தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக நேற்று கோயில் புனிதத்தன்மையை பராமரிக்கும் விதமாகவும் மகாசாந்தி யாகம் நடத்தப்பட்டது. மேலும், ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் 11 நாட்கள் பரிகாரமாக விரதம் இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், இன்று காலை ஸ்ரீ துர்கா மல்லேஸ்வரா சுவாமி வர்லா தேவஸ்தான கோயிலில் பரிகார விரதத்தை தொடங்கினார்.


Click it and Unblock the Notifications











