படம் ஃபென்டாஸ்டிக்..காந்தாரா பட இயக்குநரை நேரில் வாழ்த்திய கார்த்தி!

சென்னை: காந்தாரா பட இயக்குநரை நடிகர் கார்த்தி நேரில் சந்தித்து பாராட்டினார்.

கேஜிஎப் திரைப்படத்திற்கு பிறகு கன்னட திரைப்படமான காந்தாரா படத்தின் மீது அனைவரின் பார்வையும் விழுந்துள்ளது. அண்மையில் திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இப்படத்தை ரிஷப் ஷெட்டி என்பவர் இயக்கி நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர்.

தமிழில் ரிலீஸ்

தமிழில் ரிலீஸ்

காந்தாரா கன்னட திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15ந் தேதியான இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. இப்படத்தை பார்த்து வியந்து போன நடிகர் தனுஷ், பிரபாஸ், கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என படத்தை வெகுவாக புகுழ்ந்து வருகின்றனர்.

காந்தாரா கதை

காந்தாரா கதை

அரசர் நிம்மதியைத் தேடி காட்டுக்குள் செல்கிறார் அப்போது அப்பகுதி மக்கள் கடவுளை வழிபடுவதைப் பார்த்து, அவர்களுக்கு பல ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்துவிடுகிறார். இதற்குப் பிறகு 1970களில் அந்த அரசனின் வழிவந்த ஒருவன், அந்த நிலத்தை அந்த மக்களிடமிருந்து மீட்க திட்டம்போடுகிறான். ஆனால், அங்கிருக்கும் கடவுள் அவரை எச்சரிக்கை செய்து தடுத்து, அவனை கொன்றுவிடுகிறது.

த்ரில்லர் கதை

த்ரில்லர் கதை

இதற்குப் பிறகு, 1990ல் பண்ணையார் ஒருவர் அந்த நிலத்தை மக்களிடமிருந்து பறிக்க நினைக்கிறார். மற்றொரு பக்கம், காப்புக் காடுகளை அளந்து மக்களை வெளியேற்றப்போவதாகக் கூறுகிறது வனத்துறை. அந்த மக்கள் வணங்கும் தெய்வம் என்ன செய்தது... அப்பகுதி மக்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படம் ஃபென்டாஸ்டிக்..

படம் ஃபென்டாஸ்டிக்..

இந்நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் கார்த்தி, காந்தாரா படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். என்னுடைய மைத்துனன் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு, படத்தை கண்டிப்பா பாருங்க என்றார், நான் படம் பார்த்து அழுத்துட்டேன் எனக் கூறினார். நானும் படம் பார்த்தேன் படம் சிறப்பாக உள்ளது எனப் பாராட்டினார். அப்போது பேசிய படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி, சமூகத்தில் ஆதிக்க சாதி, ஒடுக்கப்பட்ட சாதி என்ற பாகுபாடு இல்லாத ஒரு நிலையை கொண்டு வர வேண்டும் என்பது தான் நோக்கம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X