பொன்னியின் செல்வன்.. த்ரிஷாவின் குந்தவை போஸ்டர் ரிலீஸ்.. வந்தியத்தேவன் சேட்டையை ஆரம்பித்த கார்த்தி!
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது.
நாளை ஜூலை 8ம் தேதி பொன்னியின் செல்வன் டீசர் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாரம் முழுவதும் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்களை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், சற்று முன் வெளியான த்ரிஷாவின் குந்தவை போஸ்டரை பார்த்து நடிகர் கார்த்தி கிண்டலாக போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பாகுபலி சீன்
பாகுபலி படத்தில் குழந்தையை தண்ணீருக்குள் மூழ்கிய நிலையிலும், தூக்கிப் பிடித்துக் கொண்டு ராஜமாதா சிவகாமி தேவி இருக்கும் காட்சியே பொன்னியின் செல்வன் கதையில் இருந்து ஈர்க்கப்பட்ட நிலையில் தான் இயக்குநர் ராஜமெளலி வைத்துள்ளார். பொன்னி நதியில் தவறி விழும் அருள் மொழி வர்மனை பொன்னித் தாயே காப்பாற்றி கொடுப்பதாக கதை அமைக்கப்பட்ட நிலையில் தான் பொன்னியின் செல்வன் என்றே இந்த கதைக்கு பெயர் வந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜ ராஜ சோழன் கதை
சோழர்களின் ஆட்சியை பார் போற்றும் அளவுக்கு கொண்டு சென்ற ராஜ ராஜ சோழனின் கதை தான் பொன்னியின் செல்வன். அருள் மொழி வர்மன் ராஜ ராஜ சோழனாக ஆவதற்கு முன்னதாக, நடந்த அரசியல் சதி விளையாட்டு மற்றும் வீர பாண்டியனின் மரணத்திற்காக சோழர்களை பழிவாங்க துடிக்கும் நந்தினியின் வெறியையே இந்த பொன்னியின் செல்வன் கதையாக அமரர் கல்கி எழுதி உள்ளார்.

ஜோடி மாறிப்போச்சே
ஆதித்த கரிகாலன் (விக்ரம்) மற்றும் அருள் மொழி வர்மன் (ஜெயம் ரவி) ஆகிய இருவரது சகோதரி தான் குந்தவை பிராட்டியார் (த்ரிஷா). சாமி, பீமா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த த்ரிஷா, உனக்கும் எனக்கும், சகலகலா வல்லவன் மற்றும் பூலோகம் படங்களில் ஜெய ரவியுடன் ஜோடி போட்டு நடித்த த்ரிஷா இந்த படத்தில் இருவருக்கும் சகோதரியாக நடித்துள்ளார். வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்திக்குத் தான் குந்தவை இந்த படத்தில் ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

லைவ் லொகேஷன் அனுப்புங்க
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்தில் நடித்த த்ரிஷா நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கத்தில் இப்படியொரு பிரம்மாண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், அவரது போஸ்டர் வெளியான நிலையில், வந்தியத்தேவனாக அந்த படத்தில் நடித்துள்ள நடிகர் கார்த்தி "இளவரசிPlease send me live location, உங்கள் அண்ணனின் ஓலையை drop off பண்ணனும்!" கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.
Recommended Video

வந்தியத்தேவன் சேட்டை
பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன் என்கிற கதாபாத்திரம் தான் ஆரம்பம் முதல் முடிவு வரை வலம் வரும் ஒரு கதாபாத்திரம். அனைத்து இடங்களுக்கு அந்த கதாபாத்திரம் டிராவல் செய்ய செய்யத் தான் கதையே நகரும். குறும்புத்தனமும் சேட்டை குணமும் கொண்ட கதாபாத்திரத்தில் கார்த்தி நிச்சயம் கலக்கி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











