Karthi: கார்த்தி பிறந்தநாளில் அடுத்தக் கொண்டாட்டம்.. இன்று வெளியாகும் கார்த்தி 26 பர்ஸ்ட் லுக்!

சென்னை: நடிகர் கார்த்தி அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார். கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் ஜப்பான் படங்களில் பொன்னின் செல்வன் 2 கார்த்திக்கு சிறப்பாக கை கொடுத்தது. ஜப்பான் படம் ரசிகர்களை கவர தவறியது. வசூலிலும் சொதப்பியது.

இந்நிலையில் கார்த்தி அடுத்தடுத்து கார்த்தி 26 மற்றும் கார்த்தி 27 படங்களில் நடித்துள்ளார். கார்த்தி தனது பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வரும் நிலையில் கார்த்தி 27 படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் டைட்டில் ஆகியவை நேற்று மாலை வெளியானது. இந்நிலையில் இன்றைய தினம் கார்த்தி 26 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

Actor Karthi birthday celebrations continues Karthi 26 first look release today

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வருபவர். பருத்திவீரன் படத்தில் துவங்கிய இவரது வெற்றிப்பயணம் தொடர்ந்து அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களில் இவரை வெளிப்படுத்தி வருகிறது. இன்றைய தினம் தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி நேற்றைய தினம் கார்த்தி 27 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் இவற்றுடன் படத்தின் டைட்டிலும் வெளியிடப்பட்டது. மெய்யழகன் என்று இந்தப் படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

மெய்யழகன் படம்: மெய்யழகன் படத்தில் கார்த்திக்கும் அரவிந்த்சாமிக்கும் சமமான கேரக்டர்கள் என்று கூறப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கார்த்தி, நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்துள்ள கார்த்திக் 26 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் அவரது பிறந்தநாளையொட்டி இன்று மாலை வெளியாக உள்ளதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து வரும் சூழலில் படத்தில் அவருடன் கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், கௌதம் கார்த்திக் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

கார்த்தி 26 பர்ஸ்ட் லுக்: இந்த படமும் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று கூறப்படுகிறது. படத்திற்கு வா வாத்தியாரே என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் இன்று மாலை படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதால் படத்தின் டைட்டிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே அடுத்ததாக கார்த்தி நடிப்பில் சர்தார் 2 படத்தின் சூட்டிங் வரும் ஜூலை மாதத்தில் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சர்தார் 2 பட சூட்டிங்: முதல் பாகத்தை போலவே இந்த படத்தையும் பிஎஸ் மித்ரன் இயக்கவுள்ள சூழலில் படத்தின் கார்த்திக்கு ஜோடியாக இரண்டு பாலிவுட் நடிகைகள் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். அசர்பைஜான் மற்றும் கசகஸ்தான் ஆகிய இடங்களில் படத்தின் சூட்டிங் நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக சென்னை மற்றும் ஐதராபாத்தில் 3 பிரம்மாண்டமான செட்கள் போடப்பட உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் சர்வதேச அளவில் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X