Karthi birthday: கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷல்.. வெளியானது கார்த்தி 27 டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்!
சென்னை: நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் ஜப்பான் படங்கள் வெளியாகின. இதில் பொன்னியின் செல்வன் 2 அவருக்கு சிறப்பாக கை கொடுத்த சூழலில் தீபாவளி ரிலீசாக வெளியான ஜப்பான் படம் சொதப்பியது. இந்நிலையில் தற்போது கார்த்தி 26 மற்றும் கார்த்தி 27 படங்களில் நடித்துள்ளார் கார்த்தி.
96 பட இயக்குநர் பிரேம்குமார் -கார்த்தி கூட்டணியில் உருவாகியுள்ள கார்த்தி 27 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாளைய தினம் கார்த்தி தனது 47வது பிறந்த நாளை கொண்டாடவுள்ள சூழலில் தற்போது கார்த்திக் 27 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. படத்தில் அரவிந்த்சாமிக்கும் கார்த்திக்கும் சமமான கேரக்டர்கள் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் அதை வெளிப்படுத்தும் வகையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தியின் திரையுலக பயணம் பருத்தி வீரன் படத்தில் துவங்கியது. இந்த படத்தில் கிராமத்து கெட்டப்பில் கார்த்தி நடித்திருந்தார். தன்னுடைய முதல் படத்திலேயே மிகவும் அழுத்தமான கதைக்களத்தில் கார்த்தி நடித்திருந்தார். தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டர்களில் சிக்கிக் கொள்ளாமல் கல்லூரி மாணவர், துருதுரு இளைஞர், காவல்துறை அதிகாரி, கைதி என வித்தியாசமான கதைக்களங்களில் தொடர்ந்து கார்த்தி நடித்து வருகிறார்.. இவரது நடிப்பில் வெளியான சர்தார், தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் கைதி படங்களின் இரண்டாவது பாகங்கள் உருவாக உள்ளன. இதில் சர்தார் 2 படத்தின் ஷூட்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது.
கார்த்தி 27 படம்: கடந்த ஆண்டில் கார்த்தி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு தீபாவளி ரிலீசாக வெளியான அவரது ஜப்பான் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வி படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி ஒரு சிறப்பான வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் மற்றும் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கங்களில் அடுத்தடுத்து கார்த்தி 26 மற்றும் கார்த்திக் 27 படங்களில் நடித்துள்ளார் கார்த்தி.
பர்ஸ்ட் லுக் & டைட்டில்: இதில் 96 பிரேம்குமார் -கார்த்தி கூட்டணியில் உருவாகியுள்ள கார்த்தி 27 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. நாளைய தினம் கார்த்தி தனது 47வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதை சிறப்பிக்கும் வகையில் தற்போது கார்த்தி 27 படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. முன்னதாகவே கூறப்பட்ட மெய்யழகன் என்ற டைட்டிலே இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமிக்கும் கார்த்திக்கும் சமமான கேரக்டர்கள் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ள சூழலில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
மெய்யழகன் டைட்டில்: தில் சைக்கிளில் அரவிந்த்சாமி முன்னே உட்கார்ந்து ஓட்டும் சூழலில் பின்னே எதிர்திசையை பார்த்தபடி கார்த்தி உட்கார்ந்திருப்பதாக காணப்படுகிறது. இந்த படம் விரைவில் தனது ரிலீஸ் தேதி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கார்த்தி 26 படத்தின் சூட்டிங்கும் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் வா வாத்தியாரே என்று கூறப்பட்டுள்ள சூழலில் இந்த டைட்டில் குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











