அதுக்கு நான் செட் ஆக மாட்டேன்.. அண்ணனுடன் கம்பேர் செய்துக் கொண்ட நடிகர் கார்த்தி!
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தங்களது சினிமா கேரியரில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
சூர்யா தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் விருமன் படத்தையும் தயாரித்து வெளியிட்டிருந்தார்.
இருவரும் நடிப்பை தவிர்த்து தனித்தனியாக அறக்கட்டளைகளை நடத்தி வருகின்றனர். பொது நிகழ்ச்சிகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி
நடிகர் சிவக்குமாரின் மகன்களாக சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இருவரும் தங்களது சினிமா கேரியரை திறம்பட செயல்படுத்தி வருகின்றனர். இருவரும் வெற்றி நாயகர்களாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளராக சூர்யா
நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. தற்போது தன்னுடைய சூர்யா 42 படத்திற்காக இயக்குநர் சிவா இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார் சூர்யா. மேலும் 2டி என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் இணைந்து நடத்தி வருகிறார்.

கார்த்தி படத்தை தயாரித்த சூர்யா
தன்னுடைய நடிப்பில் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களையும் இவர் தயாரித்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய தம்பி கார்த்தி நடிப்பில் விருமன் படத்தையும் தயாரித்து வெளியிட்டார் சூர்யா. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தான் நடிப்பது மட்டுமின்றி தயாரிக்கவும் செய்து வருகிறார்.

தனித்தனியாக அறக்கட்டளைகள்
இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் அறக்கட்டளைகளை தனித்தனியாக நடத்தி வருகின்றனர். இதன்மூலம் பல ஏழை மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இருவரையும் பொது நிகழ்ச்சிகளிலும் அதிகமாக பார்க்க முடிகிறது.

பிட்னஸ் குறித்து கார்த்தி பேச்சு
இந்நிலையில் பிரபல விஜே ரம்யாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்தி உடல்நலன் குறித்த பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டார். கடந்த 10 ஆண்டுகளாக ரம்யாவை தெரியும் என்று தெரிவித்துள்ள கார்த்தி, நம்முடைய உணவுடன் கூடிய உடல்நலனே சிறந்தது என்றும் தமிழ்நாட்டு பெண்ணான ரம்யா அதை சிறப்பாக கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்ணனை போல பிட்னஸ் கிடையாது
மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட உடல்நலன் மற்றும் அதுகுறித்த புரிதல் தேவை என்றும் தன்னுடைய அண்ணனின் உடல்நலன்போல தனக்கு இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளின் அனுபவங்களை ரம்யா தன்னுடைய பிட்னஸ் சார்ந்த புத்தகத்தில் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உடலமைப்பில் வேறுபாடு
சூர்யா தன்னுடைய உடல்நலனில் மிகவும் அக்கறை கொண்டவர். 6 பேக்ஸ் உடலமைப்பையும் ஒரு காலகட்டத்தில் வைத்திருந்தவர். ஆனால் நடிகர் கார்த்தி தன்னுடைய உடலை அழகாக ரசிகர்களிடையே வெளிப்படுத்துபவர். கார்த்தி கூறுவது போல சகோதரர்களாக இருந்தாலும் இருவரது உடலமைப்பிலும் வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.


Click it and Unblock the Notifications











