சினிமாவில் 16 ஆண்டுகளை கடந்த நடிகர் கார்த்தி.. கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை : நடிகர் கார்த்தியின் திரைப்பயணம் பருத்தி வீரன் என்ற படத்திலிருந்து துவங்கியது.
மிகவும் கரடுமுரடான கேரக்டரை தன்னுடைய முதல் படத்திலேயே தேர்ந்தெடுத்து நடித்து, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் கார்த்தி.
இந்தப் படத்தை தொடர்ந்து அவரது கேரக்டர் வித்தியாசமான கேரக்டர்களுடன் தொடர்ந்து வருகிறது.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தியின் பயணம் பருத்தி வீரன் படத்தில் துவங்கியது. இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் பிரியா மணி. பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சரவணன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இயல்பான மண்வாசனையை வெளிப்படுத்தியது இந்தப் படம்.

கிராமத்து இளைஞனாக கார்த்தி
தன்னுடைய முதல் படத்திலேயே கரடுமுரடான கிராமத்து இளைஞராக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகர் கார்த்தி. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இவரது நடிப்பு அதிகமான பாராட்டுக்களுக்கு உள்ளானது. தொடர்ந்து 16 ஆண்டுகாலங்களாக திரையுலகில் முன்னணி நாயகனாக, ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஹீரோவாக இருப்பது சாத்தியமில்லை. ஆனால் அதை கார்த்தி தன்னுடைய கேரியரில் சாத்தியப்படுத்தியுள்ளார்.

வித்தியாசமான கதைக்களங்கள்
தொடர்ந்து கார்த்தியின் கேரியரில் ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், நான் மகான் அல்ல, சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, பொன்னியின் செல்வன் என வித்தியாசமான இயக்குநர்களுடன் கைகோர்த்து அனைவருக்கும் பேவரைட்டான ஹீரோவாக உள்ளார். கடந்த ஆண்டில் மட்டுமே விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்து கார்த்தியின் நடிப்பில் 3 படங்கள் வெளியாகின. இந்த மூன்று படங்களும் வித்தியாசமான ஜானர்களில் ரசிகர்களை மிரட்டியது.

அடுத்தடுத்த படங்கள்
குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னத்துடன் கைகோர்த்துள்ளார் கார்த்தி. இந்தப் படத்தில் கார்த்தியின் நடிப்பு அதிகமான பாராட்டுக்களுக்கு உள்ளானது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாகம் வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராஜூ முருகன் இயக்கத்தில் தற்போது ஜப்பான் என்ற படத்திலும் இணைந்துள்ளார் கார்த்தி.

பொதுப்பணிகளில் கார்த்தி
தனியாக பொதுவெளிகளிலும் நடிகர் கார்த்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்போது உழவன் அறக்கட்டளை சார்பில் பல சமூக நலப்பணிகளை முன்னெடுத்து வருகிறார். சமீபத்தில் இந்த அறக்கட்டளை சார்பாக உழவர் விருதுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கார்த்தியின் தந்தை சிவக்குமாரும் கலந்துக் கொண்டார்.

16 ஆண்டுகளை பூர்த்தி செய்த கார்த்தி
இதனிடையே, சினிமாவில் தன்னுடைய 16 வருடங்களை இன்றைய தினம் பூர்த்தி செய்துள்ளார் நடிகர் கார்த்தி. இதையொட்டி, அவரது ரசிகர்கள் பலரும் தங்களுடைய மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். கார்த்திக்கும் பலதரப்பட்ட அளவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ட்ரெண்டிங்கில் கார்த்தி
மேலும் #16YearsofKarthiism என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. கார்த்தியின் கைதி உள்ளிட்ட பல படங்களை மேற்கோள் காட்டி வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கைதி படத்தில் கார்த்தி வாழ்ந்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











