Karthi: ரோலக்ஸை நேர்ல பாக்கணுமில்ல.. சீக்கிரம் பார்த்துடுவோம்.. கைதி 2 அப்டேட் கொடுத்த கார்த்தி!

சென்னை: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் கவனத்தை ஈர்த்து வந்தாலும் கடந்த இரு ஆண்டுகளாக அவரது படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. இதனால் ரசிகர்கள் அதிகமான ஏமாற்றத்தில் இருந்த நிலையில், அனைத்திற்கும் சேர்த்து வைத்ததை போல அவரது கங்குவா படம் அடுத்த மாதத்தில் ரிலீசாகவுள்ளது.

சூர்யாவின் கேரியரில் இதுவரை இல்லாத வகையில் கங்குவா படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் அதிகமான பிரம்மாண்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் அடுத்த மாதம் 14ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

karthi suriya

கங்குவா படம்: நடிகர் சூர்யா -இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இருவேறு கெட்டப்புகளில் சூர்யா மாஸ் காட்டியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்களில் சூர்யாவின் இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளை பார்க்க முடிந்தது. இந்தப் பாடல்களில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து ஆட்டம் போட வைத்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.

கங்குவா இசை வெளியீடு: இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். இதன் பிரமோஷன்களுக்காக படக்குழுவினர் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இதனிடையே, நேற்றைய தினம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இதில் சூர்யாவின் குடும்பத்தினர், படக்குழுவினர் என பலரும் பங்கேற்று படம் குறித்த பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளனர்.

சூர்யா குறித்து கார்த்தி பேச்சு: நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, சிவக்குமார் உள்ளிட்டவர்களும் பங்கேற்று பேசினர். நடிகர் சூர்யாவின் படிப்பு, கல்லூரி, வேலை உள்ளிட்ட பல விஷயங்களை நடிகர் சிவகுமார் பேசிய நிலையில், நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, தன்னுடைய அண்ணன் நடிக்க வந்தபோது நடிக்க தெரியலை, டான்ஸ் ஆட தெரியலை, ஃபைட் பண்ண தெரியலைன்னு பல விமர்சனங்களை சந்தித்ததாகவும் தொடர்ந்து இதன் கிளாஸ்களுக்கு சென்றுதன்னை வடிவமைத்துக் கொண்டு தற்போது அனைத்திலும் பிய்த்து உதறுவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். தன்னுடைய நெகட்டிவ் அனைத்தையும் தன்னுடைய உழைப்பால் பாசிட்டிவ்வாக சூர்யா மாற்றிக் காட்டியதாகவும் கூறியுள்ளார்.

ரோலக்ஸ் அப்டேட் கொடுத்த கார்த்தி: தொடர்ந்து பேசிய கார்த்தியிடம் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதி 2 படம் குறித்து கேள்வி எழுப்பினர், இதற்கு பதிலளித்த அவர், கைதி 2 அடுத்த ஆண்டு பண்ணிடுவோம் என்று பதிலளித்தார். தொடர்ந்து ரோலக்சை நேரில் பார்க்கனுமில்ல என்று ட்விஸ்ட் வைத்த கார்த்தி, நேர்ல பார்த்தே ஆகனுமில்ல, சீக்கிரம் பார்த்துடுவோம் என்றும் கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தற்போது கூலி படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ், இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு கார்த்தியின் கைதி 2 படத்தை இயக்கவுள்ளதாக முன்னதாகவே அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X