நயன்தாரா-விக்கிக்கு நச்சுனு வாழ்த்து சொன்ன கார்த்தி..பதிலளித்த விக்கி!

சென்னை : நடிகர் கார்த்தி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு பூங்கொத்தை அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 5 வருடங்களாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் பெற்றோராகிவிட்டதாக புகைப்படத்துடன் ஷேர் செய்திருந்தார்.

இணையத்தில் பெருகும் சர்ச்சை

இணையத்தில் பெருகும் சர்ச்சை

நயன்தாரா விக்கிக்கு பலரும் வாழ்த்துக்களை சொன்னாலும், 4 மாதத்திற்குள் வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள என்ன காரணம் என ரசிகர்கள் கேள்விகேட்டு வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள்,நடந்தது கல்யாணம் இல்லையா? வளைகாப்பா? என இருவரையும் கிண்டலடித்து வருகின்றனர். ஆனால், நயன்தாராவின் நலம் விரும்பிகளோ அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுப்பார்கள் என நயனுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வாடகைத்தாய் முறை

வாடகைத்தாய் முறை

நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட செய்திக்கு பிறகு வாடகைத்தாய் குறித்து பலரும் இணையத்தில் தேடித் தேடி படித்து வருகின்றனர். இதில் திருமணமாகி குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த இந்தியத் தம்பதிகள், வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம். குழந்தை தேவைப்படும் தம்பதிக்கு பெண் 23 - 50 வயதும், ஆணுக்கு 26 - 55 வயதும் இருக்க வேண்டும். மேலும் குழந்தை பெற இயலாததற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். குழந்தை பெற்றுத்தரும் வாடகைத் தாய், குழந்தை பெற விரும்பும் தம்பதியின் உறவினராக இருக்க வேண்டும் என ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன.

விதி மீறல் இல்லை

விதி மீறல் இல்லை

இதையடுத்து, நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் இரட்டை ஆண் குழந்தைகள் விவகாரம் குறித்து விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்ற புகார் எழுந்தன. ஆனால், வாடகைத்தாய் முறைப்படுத்தல் சட்டம் ஜனவரி 25-ம் தேதி அமலாகிவிட்டாலும், இந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் 2022 ஜூன் 21-ம் தேதி அன்றுதான் வெளியிட்டது. எனவே, எப்படிப் பார்த்தாலும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சட்டத்தை மீறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளன.

வாழ்த்திய கார்த்தி

வாழ்த்திய கார்த்தி

இதையடுத்து,நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், பூங்கொத்துடன் கடவுள் உங்கள் நான்கு பேரையும் ஆசீர்வதிக்கட்டும் என்ற வாழ்த்தை அனுப்பியுள்ளார். இதற்கு விக்னேஷ் சிவனும், நடிகரின் அன்பான வாழ்த்துக்கு நன்றி என பதிலளித்துள்ளார்.சட்ட சிக்கல் இல்லை என்றதும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X