விற்றுத் தீர்ந்தது கார்த்தி படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்.. யார் வாங்கியிருக்காங்க தெரியுமா?

சென்னை : நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என 3 படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகி ஹாட்ரிக் வெற்றியை பெற்றன.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது பிரபல இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் இணைந்துள்ளார் கார்த்தி.

இந்தப் படத்திற்கு ஜப்பான் என்று பெயரிடப்பட்டு சூட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து தொடர் வெற்றிகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என 3 படங்கள் அடுத்தடுத்து ஒரு மாத இடைவெளிகளில் வெளியாகி மூன்று படங்களும் வெற்றியை கொடுத்துள்ளன. இதன்மூலம் கடந்த ஆண்டில் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளார் கார்த்தி.

ஜப்பான் படம்

ஜப்பான் படம்

தொடர்ந்து பிரபல இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு இறுதியில் பூஜையுடன் துவங்கப்பட்டது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இந்தப் படத்தின்மூலம் கார்த்தி 6வது முறையாக ஜப்பான் படம் மூலம் இணைந்துள்ளார். படத்தில் கார்த்திக்கு அனு இம்மானுவேல் ஜோடியாகியுள்ளார்.

 கார்த்தியின் 25வது படம்

கார்த்தியின் 25வது படம்

கார்த்தியின் 25வது படமாக ஜப்பான் படம் உருவாகி வருகிறது. படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். படத்தில் பிரபல இயக்குநர் விஜய் மில்டனும் நடித்து வருகிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். கார்த்தி -ஜிவி பிரகாஷ் கூட்டணி முன்னதாக பல படங்களில் மேஜிக் செய்துள்ள நிலையில், இந்தப் படத்திலும் அந்த மேஜிக் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

டிஜிட்டல் ரைட்சை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்

டிஜிட்டல் ரைட்சை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் ரைட்சை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு தரப்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்ததாக படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

நலன் குமாரசாமியுடன் இணையும் கார்த்தி

நலன் குமாரசாமியுடன் இணையும் கார்த்தி

இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக தன்னுடைய 26வது படத்திற்காக இயக்குநர் நலன் குமாரசாமியுடன் இணையவுள்ளார். இந்தப் படத்தின் பூஜை அடுத்த மாதம் 20ம் தேதி போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அட்வென்சர் காமெடி படமாக இந்தப் படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விரைவில் கைதி 2 படம்

விரைவில் கைதி 2 படம்

அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் கார்த்தி. லோகேஷ் கனகராஜூடன் இணைந்து கைதி என்ற சூப்பர் ஹிட் படத்தை அவர் கொடுத்த நிலையில், விரைவில் அந்தப் படத்தில் அவர் இணையவுள்ளார். தற்போது தளபதி 67 படத்தில் கவனம் செலுத்திவரும் லோகேஷ், அடுத்ததாக கைதி 2 படத்தை இயக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X