H Vinoth: கமல் படத்திற்கு பிறகு கார்த்தி படம்தான்.. அடுத்தடுத்த வெற்றிக்கு தயாராகும் ஹெச் வினோத்!

சென்னை: நடிகர் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த படம் தீரன் அதிகாரம் ஒன்று.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் டைரக்ட் செய்திருந்தார்.

Actor Karthi -H Vinoth combination movie Theeran adhigaaram ondru movie sequel to be happen soon

இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் கேரக்டரில் மிகவும் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கார்த்தி.

நடிகர் கார்த்தி: அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் சிறப்பான இயக்குநர்களின் டைரக்ஷனில் நடித்து வருகிறார் கார்த்தி. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான ஜானர்களில் நடித்து கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் 2 படம் மற்றும் ஜப்பான் படங்கள் வெளியாகியுள்ளன. இதில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் கார்த்தியின் கேரக்டர் மிகவும் சிறப்பாக அமைந்தது. ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

தீரன் அதிகாரம் ஒன்று: உண்மைக்கதையை மையமாக கொண்டு கடந்த 2017ம் ஆண்டில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் இயக்குநர் ஹெச் வினோத்திற்கு மட்டுமில்லாமல் கார்த்தியின் கேரியரிலும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்தே அஜித்தின் அடுத்தடுத்த 3 படங்களை இயக்கும் வாய்ப்பை ஹெச் வினோத் பெற்றார். அடுத்ததாக கமல்ஹாசனின் KH233 படத்தையும் ஹெச் வினோத் இயக்கவுள்ளார்.

தள்ளிப்போன கமல் படத்தின் சூட்டிங்: கமலின் KH233 படத்தின் சூட்டிங் இந்த மாதத்தில் துவங்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியன் 3 படத்தின் வேலைகளில் கமல் பிசியாகியுள்ளதால் KH233 படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. குறுகிய கால தயாரிப்பாக இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் KH234 படத்தில் கமல் நடிக்கவுள்ளதாகவும் முன்னதாக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திலும் அவர் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் 2வது பாகம்: கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அடுத்ததாக இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திலும் ஹெச் வினோத் கவனம் செலுத்தவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் படத்தை இயக்கி முடித்தவுடன் இந்தப் படத்தின் வேலைகளில் அவர் ஈடுபடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கான ஒன்லைன் கதையை கார்த்தியிடம் சொல்லி அவர் ஓகே வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல் படத்திற்கு பிறகு கார்த்தி படம்: கடந்த 2017ம் ஆண்டில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று மிகச்சிறந்த காவல் அதிகாரியின் செயல்பாட்டை முன் வைத்தது. இந்நிலையில் அடுத்ததாக இதேபோன்ற அழுத்தமான கதைக்களத்தில் புதிய கதையை ஹெச் வினோத் உருவாக்குவார் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டில் இந்தப் படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டு சூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீரன் அதிகாரம் ஒன்று படம் வெளியாகி தற்போது 6 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்தப் படம் 6 ஆண்டுகளுக்கு முன்பே 72 கோடி ரூபாய் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X