தான் ஒரு வில்லேஜ் பாய்ன்னு அரவிந்த் சாமி சொன்னாரு.. நான் நம்பலை.. தொடர்ந்து கலாய்த்த கார்த்தி!
சென்னை: நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மெய்யழகன் படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப்படத்தை 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கியுள்ளார். 96 படத்தை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு மெய்யழகன் படத்தை அவர் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள மெய்யழகன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்றைய தினம் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

மெய்யழகன் படம்: நடிகர் கார்த்தியின் 27வது படமாக உருவாகியுள்ளது மெய்யழகன்/இந்த படத்தை 96 என்ற மிகப் பெரிய ட்ரெண்ட் செட்டர் படத்தை கொடுத்த இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ளார். 96 படத்தை தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அவர் அடுத்த படத்தை இயக்காமல் இருந்த நிலையில் தற்போது கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள மெய்யழகன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் தஞ்சாவூரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.
ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி: சென்னையின் மிகப்பெரிய மாலில் ஏராளமான ரசிகர்கள் சூழ இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. நிகழ்ச்சியில் கார்த்தி, ஸ்ரீதிவ்யா, அரவிந்த்சாமி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ள நடிகர் கார்த்தி, தன்னை அண்ணா என்று அரவிந்த்சாமி அழைத்ததை கலாய்த்து பேசினார். தொடர்ந்து அரவிந்த்சாமியை அடுத்தடுத்து கலாய்த்துக் கொண்டே இருந்தார் கார்த்தி. கைதி படத்தை போலவே மெய்யழகன் படம் முழுவதும் இரவு நேரங்களில் ஷூட்டிங் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் கைதி படத்தை போல அதிகமான சண்டை காட்சிகள் இந்த படத்தில் இருக்காது என்றும் சண்டைக்காட்சிகளை எதிர்பார்த்து ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க வர வேண்டாம் என்றும் கார்த்தி தெரிவித்துள்ளார்.
கார்த்தி உற்சாகம்: தொடர்ந்து இரவு நேரங்களில் ஷூட்டிங்கின் இடைவெவேளைகளின்போது அரவிந்த்சாமி தான் மற்றும் ராஜ்கிரன் என அனைவரும் இந்த படத்தின் காட்சிகள் குறித்து பேசியதாகவும் பிரேம்குமார் வடிவமைத்த காட்சிகளை அப்படியே கொண்டு வந்தால்கூட இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்று ராஜ்கிரண் தெரிவித்ததாகவும் கார்த்தி குறிப்பிட்டுள்ளார். இந்த பேச்சின்போது அரவிந்த்சாமி தன்னை வில்லேஜ் பாய் என்று குறிப்பிட்டதாகவும் ஆனால் தான் அதை நம்பவில்லை என்றும் அவர் அப்படியா இருக்கிறார் என்றும் அரவிந்த் சாமியை மீண்டும் கலாய்த்தார்.
6 நாட்களில் ரெடியான ஸ்கிரிப்ட்: அந்த அளவில் கிராமத்துடன் அரவிந்த் சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மெய்யழகன் படத்தை கொடுத்த பிரேம்குமாரை 6 ஆண்டுகள் தயாரிப்பாளர்கள் எப்படி விட்டு வைத்தார்கள் என்றும் கேள்வி எழுப்பிய கார்த்தி, அவர் தன்னுடைய ஸ்கிரிட்டிற்காக அந்த அளவிற்கு மெனக்கிடுவார் என்றும் பாராட்டியுள்ளார். ஆனால் மெய்யழகன் படத்தின் ஸ்கிரிப்டை ஆறு நாட்களில் அவர் எழுதி முடித்ததாகவும் அப்படியே ஒரு பிளோவில் உட்கார்ந்து எழுதி இருப்பாரோ என்றும் கேள்வி எழுப்பினார். படம் குறித்த பல்வேறு சுவாரசியங்களை அவர் இந்த நிகழ்வில் பகிர்ந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











