Karthi: டேய் கொஞ்சம் அமைதியா இருடா.. நடிகர் சித்தார்த்தை பார்த்து கார்த்தி கதறல்!
சென்னை: நடிகர் கார்த்தி அடுத்தடுத்த படங்களில் கவனம் ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அவரது மெய்யழகன் படம் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்தது. ஆனாலும் தொடர்ந்து வளவளவென கார்த்தி பேசுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து படத்தின் சில நிமிடங்களின் நீளம் குறைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே அடுத்ததாக அவரது நடிப்பில் வா வாத்தியார் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சர்தார் 2 படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் கார்த்தி. இதனிடையே அடுத்தடுத்த பொது நிகழ்ச்சிகளிலும் திரைப்பட விழாக்களிலும் தன்னை இணைத்து வருகிறார். மேடையில் அவரது காமெடி கலந்த பேச்சு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கார்த்தியின் கதைத்தேர்வு மிகவும் சிறப்பானது என்றும் அவர் வேண்டாம் என்று ஒதுக்கிய படங்களை ஏற்காமல் இருப்பதே நமக்கு பாதுகாப்பு என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல நடிகர் ஒருவர் கார்த்தியை புகழ்ந்திருந்தார். அந்த வகையில் காதல் படங்களிலும், காமெடி படங்களிலும் அதிரடி ஆக்ஷன் கதைக்களங்களிலும் அவர் தன்னை சிறப்பாக இணைத்து வருகிறார். இதேபோல கிராமத்து சப்ஜெக்டாக இருந்தாலும் சிட்டி சப்ஜெக்டாக இருந்தாலும் சிறப்பாக பொருந்தி வருகிறார்.
மெய்யழகன் படம்: கார்த்தி நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான மெய்யழகன் படம் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றது. குடும்ப உறவுகளின் மகத்துவத்தை இந்தப் படத்தில் புகுத்தியிருந்தார் 96 பட புகழ் பிரேம்குமார். ஆயினும் இந்தப்படம் வெற்றிப்பட வரிசையில் இணையவில்லை. படத்தில் கார்த்தி வளவளவென பேசிக்கொண்டே இருக்கிறார் என்ற விமர்சனங்களை படம் பெற்றது. இதையடுத்து படத்தின் 18 நிமிட நீளம் குறைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வா வாத்தியார் படம் கார்த்தி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மிஸ் யூ பட இசை வெளியீடு: இதனிடையே அடுத்ததாக சர்தார் 2 படத்தில் கார்த்தி நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்கவுள்ளார். இதனிடையே சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் உருவாகி வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள மிஸ் யூ படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கார்த்தி சித்தார்த் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வந்தவுடனேயே தனக்கு தான் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றிய காலகட்டங்கள் நினைவுக்கு வந்துவிட்டதாக அவர் கூறினார்.
டேய் கொஞ்சம் சும்மா இருடா: தான் மணிசாரிடம் அசிஸ்டெண்டாக பணிபுரிந்தபோது, அவரது இயக்கத்தில் சித்தார்த் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்ததாகவும் ஹீரோவாக இருந்தபோதிலும் அங்கிருந்தவர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்ததாகவும் பேக்கிரவுண்ட் செக் செய்துக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்ட கார்த்தி, ஒரு கட்டத்தில் மணி சார் தாங்க முடியாமல் டேய் பேசாம அவனை நடிக்க மட்டும் சொல்லுங்கடா என்று கூறியதாக கார்த்தி தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார். அதேபோல தற்போது இந்த நிகழ்ச்சியிலும் அதே வேலையை சித்தார்த் செய்துக் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டினார். இங்கேயும் லைட்டை திருப்புங்க, கதவை மூடுங்க என சித்தார்த் கூறிக் கொண்டிருப்பதாக கூறிய கார்த்தி, டேய் நீ கொஞ்சம் அமைதியா இருடா என்று சித்தார்த்தை பார்த்து கூறியது, அரங்கத்தினரை சிரிப்பலையில் ஆழ்த்தியது.
இன்னும் லவ் செய்துக் கொண்டிருக்கிறார்: மிஸ் யூ படத்தில் மறுபடியும் ஒரு ஆக்ஷன் படமாக, லவ் பெயிலியர் பாடல் வைத்து, சரக்கு அடிக்கும் காட்சியை வைத்துள்ளதாகவும் படம் தான் படித்த காலத்தில் பார்த்த சினிமா போல இருப்பதாகவும் கார்த்தி கூறியுள்ளார். பாய்ஸ் சித்தார்த் என்பதால் அவர் மட்டும் இன்னும் லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்றும் பார்ப்பதற்கும் அப்படியே இருக்கிறார் என்றும் கூறிய கார்த்தி அவருக்கு லவ் படங்களில் நடிக்க இது வசதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











