Actor Karthi: நடிகை ஆஷிகா ரொம்ப அழகாக இருக்கிறார்.. ஓபனாக சொன்ன நடிகர் கார்த்தி!
சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான மெய்யழகன் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 96 படத்திற்கு பிறகு பிரேம்குமார் இயக்கத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப்படம் வெளியான நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை படம் ஏற்படுத்தியிருந்தது. அதற்கேற்ப குடும்ப உறவுகளின் மகத்துவத்தை இந்தப் படத்தில் கொடுத்திருந்தார் இயக்குநர்.
ஆனாலும் திரைக்கதையை இன்னும் கிரிஸ்ப்பாக்கியிருந்தால் படம் மற்றொரு 96ஆக சிறப்பாக ரசிகர்களை கவர்ந்திருக்கும் என்ற விமர்சனங்களை இந்தப் படம் பெற்றிருந்தது. படத்தின் நீளமும் ரசிகர்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், படத்தின் நீளத்தை 18 நிமிடங்களுக்கு குறைக்கும் முடிவை இயக்குநர் மேற்கொண்டிருந்தார்.

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது நடிப்பில் வெளியான மெய்யழகன் படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. ஆனாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. படத்தில் கார்த்தியுடன் ஸ்ரீதிவ்யா, அரவிந்த்சாமி, ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில், படத்தின் அதிகப்படியான நீளம் விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து படத்தின் நீளம் 18 நிமிடங்கள் குறைக்கப்பட்டன. 96 படத்தை தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தை இயக்குநர் பிரேம்குமார் இயக்கியிருந்தார்.
சர்தார் 2 படம்: முதல் படமான 96ல் காதலை மட்டுமே பேசிய பிரேம்குமார், மெய்யழகன் படத்தில் குடும்ப உறவுகளை அதன் மகத்துவத்தை பேசினார். இந்தப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி நடிப்பில் வா வாத்தியார் படம் நலன் குமாரசாமி இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்துள்ளார். இந்தப் படத்தையடுத்து தற்போது சர்தார் 2 படத்திலும் இணைந்துள்ளார். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
கார்த்தி -ஆஷிகா ஜோடி: படத்தில் ஆஷிகா ரங்கநாத் கார்த்திக்கு ஜோடியாக இணைந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் சித்தார்த்தின் மிஸ் யூ படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்ற நடிகர் கார்த்தி படத்தின் நாயகி ஆஷிகா குறித்து பாராட்டி பேசியிருந்தார். மிஸ் யூ படத்திலும் அவர்தான் நாயகி என்பதால் அவரை கைக்காட்டி மிகவும் எனர்ஜியுடன் அவர் செயல்பட்டு வருவதாகவும் பாராட்டியிருந்தார். சிறிய ஊரிலிருந்து நடிக்க வந்துள்ள அவர், நடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுவதாகவும் குறிப்பிட்ட கார்த்தி, பெரிய டான்சர் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். அவருக்கு மொழி தெரியவில்லை என்றபோதிலும் டயலாக்குகளை மனப்பாடம் செய்து சின்சியராக செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.
ஆஷிகாவின் அழகை பாராட்டிய கார்த்தி: ஆஷிகாவின் இந்த சின்சியாரிட்டி தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் கார்த்தி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு தான் மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். அவர் இந்தப் படத்தில் மிகவும் அழகாக இருப்பதாக சுட்டிக் காட்டிய கார்த்தி, சர்தார் 2 படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும்போது மிகவும் சோர்வாக காணப்படுவதாக சுட்டிக் காட்டியுள்ளார். இதுகுறித்து தான் கேட்டபோது மிஸ் யூ படத்தில் வெயிட் போட்டிருந்ததாகவும் அப்பாவியாக நடிக்க சொன்னதாகவும் அவர் பதிலளித்ததையும் கார்த்தி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











