நடிக்கறதுக்கு முன்னாடி கார்த்திக்கு சூர்யா கொடுத்த அட்வைஸ்.. அதுதான் கார்த்திக்கு இன்ஸ்பிரேஷனாம்!

சென்னை : நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் தற்போது விருமன் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் கார்த்தி நடித்துள்ளார்.

இறுதியாக கிராமத்து கெட்டப்பில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் 4 சகோதரிகளுக்கு தம்பியாக நடித்திருந்தார் கார்த்தி.

இதையடுத்து தற்போது குடும்ப உறவுகளை மையமாக வைத்து விருமன் படம் இன்றைய தினம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

விருமன் படம்

விருமன் படம்

நடிகர் கார்த்தி, அதீதி, சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், ஆர்கே சுரேஷ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் விருமன். முத்தையா இயக்கத்தில் இந்தப் படம் கிராமத்து கதைக்களில் வெளியாகியுள்ளது.

2வது முறையாக கூட்டணி

2வது முறையாக கூட்டணி

முன்னதாக கார்த்தி -முத்தையா கூட்டணியில் வெளியான கொம்பன் படமும் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், விருமன் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இந்தப் படத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு கார்த்தி கிராமத்து இளைஞராக நடித்துள்ளார்.

சண்டியராக கார்த்தி

சண்டியராக கார்த்தி

தன்னுடைய முதல் படமான பருத்தி வீரனில் சண்டியராக நடித்திருந்தார் கார்த்தி. இந்நிலையில் தற்போது விருமன் படத்திலும் அதே போன்ற கேரக்டரில்தான் நடித்துள்ளார். ஆனால் இந்தப் படத்தில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் கார்த்தி பின்னி பெடலெடுத்துள்ளார்.

சிறப்பான புதுவரவு அதீதி ஷங்கர்

சிறப்பான புதுவரவு அதீதி ஷங்கர்

இந்தப் படத்தின்மூலம் சினிமாவில் சிறப்பான என்ட்ரி கொடுத்துள்ளார் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகளான அதீதி ஷங்கர். இந்தப் படத்தில் மதுர வீரன் என்ற பாடலையும் அவர் பாடியுள்ளார். இந்தப் படத்தின் ரிலீசையொட்டி முன்னதாக கடந்த சில தினங்களில் சிறப்பான பிரமோஷன்களில் படக்குழு ஈடுபட்டது.

சூர்யா அட்வைஸ்

சூர்யா அட்வைஸ்

இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் திரையில் தான் நடிக்க தீர்மானித்தபோது சூர்யா கொடுத்த அட்வைஸ் குறித்து கார்த்தி பேசியுள்ளார். தான் அப்போது இருந்த கேரக்டரை தொடர்ந்து நினைத்ததை சினிமாவில் அடைய முடியாது என்று சூர்யா அட்வைஸ் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா சிறப்பான உதாரணம்

சூர்யா சிறப்பான உதாரணம்

சூர்யா சினிமாவிற்கு வந்தபோது அனைவரும் அவரை கேலி செய்ததை தான் அறிவேன் என்றும் அதையெல்லாம் தாண்டி தன்னை மாற்றிக் கொண்டு பயிற்சி எடுத்து அவர் சாதித்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தனக்கு எப்போதுமே சிறப்பான உதாரணம் என்றும் கார்த்தி தெரிவித்துள்ளார்.

உத்வேகம் அளித்த சூர்யா

உத்வேகம் அளித்த சூர்யா

ஒரு நடிகராக, சமூகத்தில் ஒரு சிறந்த மனிதராக, கணவராக, அப்பாவாக அவர்தான் தனக்கு உத்வேகம் அளித்து வருவதாகவும் கார்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று வெளியாகியுள்ள கார்த்தியின் விருமன் படத்தை சூர்யா தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X