twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கைதி கார்த்தியை நம்ம எல்லோரும் குடும்பத்தோட போய் பாக்கலாம்

    |

    சென்னை: கைதி திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, ஒரு உண்மையான லாரி டிரைவரைப் போலவே வாழ்ந்து காட்டியுள்ளார். நாம் எத்தனையோ நடிகர்கள் லாரி ஓட்டுநர்களாக நடித்திருப்பதை பார்த்திருப்போம். கைலி கட்டிக்கொண்டு, முறுக்கு மீசை வைத்து கொண்டு அந்த படங்களில் அவர்கள் டிரைவர் போல் நன்றாக நடித்திருக்கலாம். ஆனால் கைதி படத்தில் கார்த்தி கடுமையாக உழைத்துள்ளார்.

    தாடி வளர்த்துக்கொண்டு, ஒரு அசல் லாரி டிரைவரை போன்ற உடல் அசைவுகளை அப்படியே உள்வாங்கிக்கொண்டு, அவர்களைப் போலவே, எண்ணெய் தலையை ஒரு விதமாக வாரிக்கொண்டு, மேக்கப் இல்லாமல், கார்த்தி ஒரு லாரி டிரைவரைப் போன்றே விட்டேத்தியாகவும், இயல்பாகவும் ஒரு லாரி டிரைவராகவே வாழ்ந்து காட்டியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    Actor Karthi has worked hard in the Kaithi Film

    ஒரு கமர்சியல் திரைப்படம் என்றால் அதில் நிச்சயம் ஒரு கதாநாயகி, மூன்று லவ் பாடல்கள், ஒரு குத்து பாட்டு, ரொமான்டிக் கட்சிகள் என கட்டாயப்படுத்தி திணிக்கப்படுகிறது. அதனால் படத்தின் கிளைமாக்ஸ்சில் அந்த கதாநாயகியின் நிலை என்னவென்று தெரியாமலேயே படம் முடிவடைந்து வணக்கம் போடப்படும். ஏனென்றால் படத்திற்கு முக்கிய அம்சம், ஹீரோ மற்றும் வில்லன். அவர்களின் நிலமையோடு கதை முடிக்கப்படும். இப்படி தான் நாம் பல காலங்களாக கமர்சியல் தமிழ் படங்களை பார்த்து வருகிறோம்.

    இந்த நிர்பந்தங்களுக்கு ஒரு முட்டுக்கட்டை போடும் வகையில் கைதி என்ற ஒரு வித்யாசமான கமர்சியல் திரைப்படத்தை நடிகர் கார்த்தியை வைத்து உருவாக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு, தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இப்படம், ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்கு எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் இருப்பது ரசிகர்களின் மகிழ்ச்சியை மேலும் கூட்டியுள்ளது.

    மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் வர்த்தக ரீதியிலான வெற்றிக்காக ஒரு ஹீரோயின் கதாபாத்திரத்தை இயக்குனர் திணிக்கவும் முயற்சிக்கவில்லை என்பதற்காக அவருக்கு ஒரு கைதட்டல்கள்.

    நாம் எத்தனையோ நடிகர்கள் லாரி ஓட்டுநர்களாக நடித்திருப்பதை பார்த்திருப்போம். கைலி கட்டிக்கொண்டு, முறுக்கு மீசை வைத்து கொண்டு அந்த படங்களில் அவர்கள் டிரைவர் போல் நன்றாக நடித்திருக்கலாம். ஆனால் கைதி படத்தில் கார்த்தி கடுமையாக உழைத்துள்ளார்.

    தாடி வளர்த்துக்கொண்டு, ஒரு அசல் லாரி டிரைவரை போன்ற உடல் அசைவுகளை அப்படியே உள்வாங்கிக்கொண்டு, அவர்களைப் போலவே, எண்ணெய் தலையை ஒரு விதமாக வாரிக்கொண்டு, மேக்கப் இல்லாமல், கார்த்தி ஒரு லாரி டிரைவரைப் போன்றே விட்டேத்தியாகவும், இயல்பாகவும் ஒரு லாரி டிரைவராகவே வாழ்ந்து காட்டியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் சண்டைக் காட்சிகளில் கார்த்தி மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார்.

    முழுக்க முழுக்க இருட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் காட்சிகள் ஒவ்வொன்றும் அற்புதம். மிகவும் நேர்த்தியாக படத்தை கையாண்டுள்ளனர் இயக்குனர் மற்றும் படக்குழுவினர். தேவையில்லாத விஷயங்களுக்கு படத்தில் இடம் கொடுக்காமல் ஒரு தரமான நல்ல படைப்பை தரவேண்டும் என்ற நோக்கில் அவர்கள் உழைத்த அந்த உழைப்பு நம் கண் முன்னே தெரிகிறது.

    இப்போது வரும் திரைப்படங்களில் ஆபாச காட்சிகள் எங்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் குடும்பத்துடன் படத்திற்கு செல்லவே பயமாக உள்ளது. ஆனால் இப்படத்தில் அது போல எந்த ஒரு ஆபாசமான காட்சிகளோ, வசனங்களோ இல்லாமல் மிகவும் பொறுப்புணர்வோடு கதையை மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார்கள். எனவே கன்னியமாக எடுக்கப்பட்ட இப்படம் நிச்சயம் ரசிகர்களின் வரவேற்பை பெரும் என்பதில் எந்த அச்சமுமில்லை.

    இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற ஃபிலிமிபீட் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    English summary
    In the movie Kaith, actor Karthi is shown as a real lorry driver. We would have seen a lot of actors playing lorry drivers. Kylie tied up and tucked their mustache in the films they could have played better. But Actor Karthi has worked hard on the film Kaithi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X