இயக்குனர் ராஜுமுருகனுடன் கைகோர்க்கும் கார்த்தி?
சென்னை : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் சுல்தான் திரைப்படத்தை ரெமோ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி இருக்க கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார்.
சுல்தான் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜுமுருகனுடன் கார்த்தி கைகோர்க்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுவரை சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் படங்களை இயக்கிய ராஜுமுருகன் கார்த்திக்காக பக்கா கமர்ஷியல் படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.

தெலுங்கிலும் ரசிகர்கள்
தனது ஒவ்வொரு திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வரும் நடிகர் கார்த்தி கதை தேர்வில் மிகவும் சிறந்து செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடிப்பதோடு வித்தியாசமான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவருக்கு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ள நிலையில் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியாகி வெற்றியும் பெற்று வருகிறது.

சுல்தான்
அந்த வகையில் இப்பொழுது ரெமோ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கும் சுல்தான் திரைப்படத்தில் நடித்துள்ள கார்த்திக்கிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கொடுத்திருக்க கார்த்தி நடித்த திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவானது சுல்தான் திரைப்படம் தான் என சொல்லப்படுகிறது.

ராஜுமுருகன் இயக்கத்தில்
இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட நிலையில் விரைவில் திரைக்கு வர இருக்கும் சுல்தான் திரைப்படத்தின் மூலம் ரஷ்மிகா மந்தனா தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்படுகிறார். சுல்தான் படத்தை தொடர்ந்து அடுத்து நடிக்கும் படத்தை பற்றி அப்டேட்டை இதுவரை வெளியிடாத கார்த்திக் இப்பொழுது ராஜுமுருகன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஜீவா நாடோடி பாடகராக
குக்கூ,ஜோக்கர் உள்ளிட்ட சமூக அக்கறை கொண்ட நல்ல தரமான திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் ராஜூ முருகனுக்கு என்று ஒரு தத்துவமும் அதிக நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியிiiல் இருக்க சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான ஜிப்ஸி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதில் ஜீவா நாடோடி பாடகராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

முதல் முறையாக
இந்த நிலையில் இப்போது ராஜுமுருகன் அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் இந்த திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு பக்கா கமர்சியல் திரைப்படமாக ஒரு கதையை தயார் செய்து வருவதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. குக்கூ,ஜிப்ஸி, ஜோக்கர் என இதுவரை சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை இயக்கி வந்த ராஜமுருகன் முதல் முறையாக கமர்சியல் திரைப்படம் இயக்க இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் இதைப் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











