அடுத்த ஹிட்டுக்கு ரெடி.. கார்த்தி இப்போ யாருடன் கூட்டணி தெரியுமா..எதிர்பார்ப்பை தூண்டிய புது தகவல்!

சென்னை: நடிகர் கார்த்தி நடித்து வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது.

Recommended Video

Actor Suriya | ரசிகர்மன்ற நிர்வாகியின் மனைவியை படிப்புக்காக அயர்லாந்து அனுப்பிய சூர்யா

தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதை தொடர்ந்து, நடிகர் கார்த்தி புது படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தகவல், மிகுந்த எதிர் பார்ப்பை தூண்டியுள்ளது.

சந்தோஷத்தில் ரசிகர்கள்

சந்தோஷத்தில் ரசிகர்கள்

சமீபத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்த விருமன் திரைப்படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் கார்த்தி. பொன்னியின் செல்வன் கதையில் முக்கிய கதாபாத்திரமான வந்திய தேவன் கதாபாத்திரம் கார்த்தி நடித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், அவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கட்சிதமாக பொருந்திய கதாபாத்திரம்

கட்சிதமாக பொருந்திய கதாபாத்திரம்

நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தில் அனைவரின் கதாபாத்திரமும் கச்சிதமாக பொருந்தப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல், நடிகர் கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ள சண்டை காட்சிகல் அனைத்தும் டூப் போடாமல் நிஜமாகவே கார்த்தி நடித்திருப்பது பலரின் பாராட்டுகளை பெற்று வருகின்றது. கிராமத்துக் கதாபாத்திரங்களுக்கு பக்காவாக செட் ஆன நடிகர் கார்த்தி, வரலாறு கதைகளிலும் பின்னிப் பெடல் எடுத்துள்ளார்.

எதிர்பார்ப்பை தூண்டியுள்ள பொன்னியின் செல்வன்

எதிர்பார்ப்பை தூண்டியுள்ள பொன்னியின் செல்வன்

பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர் கார்த்திக்கு இந்த பொன்னின் செல்வன் திரைப்படம் இவரது கேரியருக்கு முக்கிய திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம், சரத்குமார், என்று நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

புதுப்படத்தில் இணைந்த கார்த்தி

புதுப்படத்தில் இணைந்த கார்த்தி

பொன்னியின் செல்வன் என்ற பெரிய படத்திற்கு பிறகு, இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இதுவரை ஏற்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. ஏற்கனவே குக்கூ, ஜோக்கர், ஜிப்சி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த ராஜு முருகன் இப்படத்தை இயக்குகிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகர் கார்த்தி அதற்காக ஒத்திகை பயிற்சியையும் மேற்கொண்டு வருவதாக படக்குழுவினர் கூறி வருகின்றனர். படத்தைப் பற்றிய பல விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் கார்த்தியின் ரசிகர்களுக்கு இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X