அடுத்தடுத்த படங்களில் பிசியாகும் கார்த்தி - அடுத்த படத்தோட சூட்டிங் அப்டேட்டை தெரிஞ்சிக்கலாமா!

சென்னை : நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் அடுத்தடுத்த 3 படங்கள் ரிலீசாகி மிகந்த வரவேற்பை பெற்றன. அவருக்கு ஹாட்ரிக் வெற்றியையும் கொடுத்துள்ளன.

தற்போது பிரபல இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

இந்தப் படத்தை தொடர்ந்து அவரது அடுத்தப் படத்தின் பூஜை குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி தன்னுடைய படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். கடந்த 2007ம் ஆண்டில் பருத்தி வீரனில் துவங்கிய இவரது பயணம் சிறப்பான வகையில் தொடர்ந்து வருகிறது. எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் தன்னை சிறப்பாக புகுத்திக் கொள்ளும் கலை தெரிந்தவர் கார்த்தி. இவருக்கு காதல் கேரக்டர்களும் சிறப்பாக அமைகிறது. வயதான கேரக்டரிலும் சிறப்பாக பொருந்துகிறார்.

ஹாட்ரிக் வெற்றி

ஹாட்ரிக் வெற்றி

கடந்த ஆண்டில் கார்த்தி நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை குஷியாக்கின. இந்தப் படங்கள் மூன்றுமே அவருக்கு வெற்றிப் படங்களாக அதிலும் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த படங்களாக அமைந்தன. குறிப்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி எற்று நடித்த வந்தியத்தேவன் கேரக்டர் ரசிர்களை வெகுவாக கவர்ந்தன. இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தில் இவரது கேரக்டர் எப்படி வலுவானதாக மாறும் என்று இப்போதோ ரசிகர்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கார்த்தியின் புத்தாண்டு செய்தி

கார்த்தியின் புத்தாண்டு செய்தி

கடந்த ஆண்டு கார்த்திக்கு சிறப்பாக அமைந்த நிலையில், புத்தாண்டு வாழ்த்து செய்தியில்கூட இந்த சந்தோஷத்தை அவர் பகிர்ந்திருந்தார். 2023லும் தன்னுடைய சிறப்பான படங்கள் மூலம் தன்னுடைய தீவிர ரசிகர்களையும் பார்வையாளர்களையும் தொடர்ந்து மகிழ்விப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஜப்பான் படத்தில் கார்த்தி

ஜப்பான் படத்தில் கார்த்தி

இந்நிலையில் தற்போது பிரபல தேசிய விருது இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப் படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார் அனு இம்மானுவேல். மேலும் படத்தில் இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். கார்த்தியின் 25வது படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி

இதனிடையே இந்தப் படத்தை தொடர்ந்து சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் இணையவுள்ளார் கார்த்தி. ஸ்டூடியோ கிரின் தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இதனிடையே இந்தப் படத்தின் பூஜை வரும் பிப்ரவரி மாதம் 20ம் தேதி போடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிறப்பான திரைப்பயணம்

சிறப்பான திரைப்பயணம்

அடுத்தடுத்த வெற்றிப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் இணையும் இயக்குநர்கள் கோலிவுட்டில் அடுத்தக் கட்டத்திற்கு நகர்வது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்களை எடுத்துக் காட்டாக கூறலாம். தொடர்ந்து நான் ஸ்டாப்பாக அடுத்தடுத்த கதைக்களங்களில் நடித்து வரும் கார்த்தியின் வெற்றிப் பயணம் தொடர நாமும் வாழ்த்துவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X