சில தினங்களில் சூட்டிங் துவங்கும் கார்த்தியின் படம்.. அரசியல் கதைக்களத்தில் நடிக்கும் நம்ம ஹீரோ!
சென்னை : நடிகர் கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் விருமன் படம் வெளியானது.
இந்தப் படத்தை தொடர்ந்து இன்னும் ஒரு வாரத்தில் அவரது பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்திற்கான பிரமோஷனல் டூரில்தான் தற்போது படக்குழுவினருடன் கார்த்தி இணைந்துள்ளார்.

நடிகர் கார்த்தியின் விருமன்
நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர், சூரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியானது விருமன் படம். இந்தப் படத்தை நடிகர் சூர்யா தயாரித்திருந்த நிலையில், முத்தையா இயக்கத்தில் திரையரங்களில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. வசூல்ரீதியாக சூர்யாவிற்கு கைக்கொடுத்தது.

பொன்னியின் செல்வன் படம்
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வரும் 30ம் தேதி பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் வந்தியத் தேவனாக நடித்துள்ளார் கார்த்தி. இந்தக் கேரக்டரில் முன்னதாக ரஜினி, விஜய் ஆகியோர் நடிக்கவிருந்த நிலையில், தற்போது இந்தக் கேரக்டர் கார்த்திக்கு கிடைத்துள்ளது.

பிரமோஷனல் டூரில் கார்த்தி
இந்தப் படத்தின் பிரமோஷனல் டூரில்தான் தற்போது விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா உள்ளிட்டவர்களுடன் இணைந்துள்ளார் கார்த்தி. சென்னையில் துவங்கிய இந்தப் பயணம் திருவனந்தபுரம், பெங்களூருவை தொடர்ந்து தற்போது ஐதராபாத்தில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து டெல்லி, துபாய்க்கும் படக்குழு செல்லவுள்ளது.

சர்தார் படம்
இந்தப் படத்தை தொடர்ந்து இரட்டை வேடங்களில் கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் வயதான கேரக்டரிலும், காவல் அதிகாரி கேரக்டரிலும் கார்த்தி நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

ராஜு முருகனுடன் இணையும் கார்த்தி
இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ராஜு முருகனின் இயக்கத்தில்தான் இணையவுள்ளார் கார்த்தி. ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் வரும் அக்டோபர் 5ம் தேதி பூஜையுடன் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் களத்தை மையமா கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் தலைப்பு தற்காலிகமாக ஜப்பான் என்று வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











