பாட்ஷா இயக்குநரின் த்ரில்லர் படைப்பு.. In the Name of God வெப்சீரிஸ் டிரைலரை வெளியிட்ட கார்த்தி!

சென்னை: நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் In the Name of God வெப்சீரிஸ் டிரைலரை வெளியிட்டுள்ளார்.

பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இந்த வெப்சீரிஸ் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

ஜதி ரத்னலு படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நடிகர் பிரியதர்ஷி இந்த வெப்சீரிஸில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

கடவுளின் பெயரால்

கடவுளின் பெயரால்

In the Name of God என டைட்டிலிலேயே வித்தியாசம் காட்டி உள்ளார் இயக்குநர் வித்தியாசாகர் முத்துகுமார். மனிதர்களின், ஆசை, காமம், குரோதம் என மனிதர்கள் எப்போதெல்லாம் சாத்தான்களாக மாறுகின்றனர், எப்போதெல்லாம் கடவுளாக இருக்கிறார்கள் என கலந்து கட்டி சொல்லி உள்ளாராம் இந்த வெப் தொடரில்.

பாட்ஷா இயக்குநர்

பாட்ஷா இயக்குநர்

பாட்ஷா, ஆளவந்தான், பாபா, பரட்டை என்கிற அழகு சுந்தரம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இந்த வெப்சீரிஸ் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். தெலுங்கில் உருவாகி உள்ள இந்த வெப் தொடர் ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைலரை வெளியிட்ட கார்த்தி

டிரைலரை வெளியிட்ட கார்த்தி

டோலிவுட்டிலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் கார்த்தி இந்த வெப் சீரிஸின் டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளார். மேலும், வெப்சீரிஸில் நடித்துள்ள நடிகர்களுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கும் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

மிஸ் ஆந்திரா

மிஸ் ஆந்திரா

கடந்த 2010ம் ஆண்டு மிஸ் ஆந்திரா அழகிப் பட்டம் வென்ற நந்தினி ராய் டோலிவுட்டில் கிளாமர் குயினாக பல படங்களில் கலக்கி வருகிறார். இந்த வெப்சீரிஸில் லிப் லாக், படுக்கையறை காட்சிகள் என படு போல்டாக நடித்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். டிரைலரிலேயே இத்தனை ஹாட் காட்சிகள் என்றால் வெப்சீரிஸ் எப்படி இருக்கும் என பார்க்க ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் உள்ளனர்.

எப்போ ரிலீஸ்

வரும் ஜூன் 18ம் தேதி முதல் ஆஹா ஒடிடி தளத்தில் In the Name of God வெப்சீரிஸ் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தி வெப்சீரிஸ்களுக்கு சற்றும் குறைவில்லாத அளவுக்கு இந்த வெப்சீரிஸ் இருக்கும் என தயாரிப்பாளர் சுரேஷ் கிருஷ்ணா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X