அடுத்த ஆண்டில் துவங்கும் கார்த்தியின் கைதி 2 சூட்டிங்.. ரோலக்ஸ் இல்லாமலா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் சூட்டிங் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நடந்து வரும் சூழலில் தற்போது ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் படத்தின் சூட்டிங்கை தொடர்ந்து நடத்துவது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
கூலி படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக கார்த்தியின் கைதி 2 படத்தை இயக்க உள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி துவங்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் சூட்டிங்கை தொடர்ந்து 50 நாட்களில் நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

கைதி 2 படம்: நடிகர் கார்த்தி -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த 2019ம் ஆண்டில் வெளியான படம் கைதி. ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்து வெளியில் வரும் கைதி ஒருவர் வழியில் சந்திக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து இந்த படத்தின் கதைக்களம் உருவாகியிருந்தது. வில்லன்களை மற்றும் அவர்களின் செயல்பாடுகளையும் முறியடிக்கும் போலீஸ் அதிகாரிக்கு துணையாக கைதி இருப்பதாகவும் இந்த படத்தின் கதைக்களம் காணப்பட்டது. மேலும் ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான காட்சி அமைப்புகளை இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறப்பான வகையில் கொடுத்திருந்தது.
கூலி படத்தின் சூட்டிங்: லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்தியின் கேரியர் பெஸ்டாக கைதி படம் அமைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இது குறித்து கார்த்தி மட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜும் அவ்வப்போது கூறிவந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக கார்த்தியின் கைதி 2 படத்தை இயக்க உள்ளதாக அவர் முன்னதாக தெரிவித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் துவங்கும் கைதி 2 சூட்டிங்: கூலி படத்தின் சூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் மூன்று மாதங்கள் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால் கூலி படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதி படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி துவங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. படத்தின் சூட்டிங்கை தொடர்ந்து மேற்கொண்டு, 50 நாட்களில் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கைதி 2 படத்தில் ரோலக்ஸ்: முன்னதாக விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் அதிரடி சரவெடியாக களமிறங்கியிருந்தார் நடிகர் சூர்யா. இந்தப் படத்தில் கார்த்தியும் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள கைதி 2 படத்திலும் ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா அதிரடி காட்டவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகளையும் லோகேஷ் கனகராஜ் முன்னதாகவே துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் பாகத்தில், ஜெயிலிலிருந்து ரிலீசாகி வெளியில் வரும் கைதியின் வாழ்க்கையில் ஒரே நாள் இரவில் ஏற்படும் சம்பவங்களை காட்சிப்படுத்தியிருந்தார் லோகேஷ் கனகராஜ். இதனிடையே, இரண்டாவது பாகத்தில் எத்தகைய கதைக்களத்தை அவர் கையில் எடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











