Don't Miss!
- News
பேனா சின்னத்திற்கு எதிரான வழக்கு.. 2 துறைதான் பதில் கொடுத்திருக்கு.. ஒத்திவைத்த பசுமை தீர்ப்பாயம்!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Lifestyle
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு முதலில் 'குட்-பை' சொல்லுங்க...
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரொம்ப கஷ்டமா இருக்கு.. வடிவேல் பாலாஜி மரணம்.. நடிகர் கார்த்தி ஆழ்ந்த இரங்கல்
சென்னை: மாரடைப்பு காரணமாக சின்னத்திரை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்.
அவரது இறுதி ஊர்வலத்தில் திரைத் துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இரங்கல் தெரிவித்தார்.
குழந்தைகளை
இப்படி
தவிக்கவிட்டு
போயிட்டாரே..
வடிவேலு
பாலாஜி
மறைவுக்கு
மதுரை
முத்து
கதறல்!

சிகிச்சை பலனின்றி
பில்ரோத் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக 15 நாட்களுக்கு முன்னதாக சேர்க்கப்பட்ட நடிகர் வடிவேல் பாலாஜி, பின்னர் அங்கிருந்து ராமசந்திரா, விஜயா மருத்துவமனை, ஓமந்தூரர் மற்றும் கடைசியாக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை என ஏகப்பட்ட மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துயரத்தில் கோலிவுட்
தனது நகைச்சுவை திறனால், தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த நடிகர் வடிவேல் பாலாஜி உயிரிழந்த செய்தியை அறித்த கோலிவுட் பிரபலங்கள் நேரில் சென்றும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும், வடிவேல் பாலாஜி ஆத்மா சாந்தியடைய இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜய்சேதுபதி நேரில் அஞ்சலி
சென்னை, சேத்துப்பட்டில் உள்ள வடிவேலு பாலாஜியின் உடல் இன்று இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கொரோனா பரவல் பயத்தையும் மீறி நடிகர் விஜய்சேதுபதி உட்பட ஏகப்பட்ட திரை பிரபலங்களும், சின்னத்திரை கலைஞர்களும் நேரில் சென்று அவரது பூத உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கார்த்தி அஞ்சலி
இந்நிலையில், நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "நடிகர் வடிவேல் பாலாஜி அவர்களின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

கார்த்தி ரசிகர்கள்
நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் மற்றும் சூர்யா ரசிகர்கள் நேற்று முதலே மறைந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் கார்த்தி போட்ட இந்த இரங்கல் ட்வீட்டை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். நல்ல மனிதர் என்றும், திறமைசாலி என்றும், இவ்வளவு சீக்கிரம் போயிருக்கக் கூடாது என்றும் பல பிரபலங்களும் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.