Karthi26: எம்ஜிஆர் ரசிகராக மிரட்டும் ராஜ்கிரண்.. கையெடுத்து கும்பிட்ட கார்த்தி!
சென்னை: நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது பொன்னியின் செல்வன் 2. இந்தப் படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் மிரட்டியிருந்தார் கார்த்தி.
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் தன்னுடைய கார்த்தி 26 படத்திற்காக நடித்து வருகிறார்.
கார்த்தி படத்தில் எம்ஜிஆர் ரசிகராக வரும் ராஜ்கிரண்: நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் படங்கள் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளன. தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப் பட இயக்குநர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இந்த ஆண்டிலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் அவரது பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது. வந்தியத் தேவன் கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கல்கியின் எழுத்துக்களில் மட்டுமே இடம் பெற்றிருந்த அந்த கேரக்டரை பார்வையாளர்களுக்கு சிறப்பாக கடத்தினார்.
இந்நிலையில் தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. இந்தப் படத்தின் டயலாக் போர்ஷன்கள் அனைத்தும் நிறைவடைந்து ஒரு பாடல் சூட்டிங் மட்டுமே மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் முன் தயாரிப்பு வியாபாரம் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்தப் படத்தில் நடிகர் சத்யராஜ் கார்த்திக்கு வில்லனாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தில் நடிகர் ராஜ்கிரண், கார்த்தியின் தாத்தாவாக நடித்து வருகிறார். முன்னதாக எம்ஜிஆர் ரசிகராக நடிகர் கார்த்தி இந்தப் படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது கார்த்தியின் தாத்தாவாக நடித்துவரும் ராஜ்கிரண்தான் படத்தில் எம்ஜிஆர் ரசிகராக வருவதாகவும் அவரது காஸ்ட்யூம் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் வரும் ராஜ்கிரண், இந்தப் படத்தில் மஞ்சள் பேண்ட், சிவப்பு சட்டை, பச்சை பெல்ட் மற்றும் ப்ரவுன் ஷு சகிதம் வருகிறாராம்.

எம்ஜிஆரின் ரிக்ஷாகாரன், எங்க வீட்டுப் பிள்ளை படங்களின் தாக்கத்தில் இந்த காஸ்ட்யூம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இவரது இந்தக் கெட்டப் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அவரது கேரக்டர் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் கூறப்படுகிறது. சூட்டிங் ஸ்பாட்டில் அவரது கெட்டப்பை பார்த்து நடிகர் கார்த்தியே மிரண்டதாகவும் ஐயா என்று கையெடுத்து கும்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்ததாக தீபாவளியையொட்டி கார்த்தியின் ஜப்பான் படம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகிவரும் கார்த்தியின் 26வது படத்தின் சூட்டிங்கை வரும் அக்டோபர் மாதத்தில் கார்த்தி நிறைவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் அடுத்ததாக கார்த்தி கமிட்டாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், அந்தப் படத்தின் சூட்டிங்கும் இந்த ஆண்டின் இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











