சின்ன வயசுல இருந்தே சூர்யாவை ரோலக்ஸாதான் பார்த்துக்கிட்டு இருக்கேன்.. பயங்கரமான வில்லன்.. கார்த்தி சுவாரஸ்யம்

சென்னை: நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள மெய்யழகன் படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை 96 படத்திற்கு பிறகு இயக்குநர் பிரேம்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்த பிரமோஷன்களில் கார்த்தி, அரவிந்த்சாமி படத்தின் இயக்குநர் பிரேம்குமார் மற்றும் ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல பேட்டிகளை தனியாகவும் கூட்டாகவும் இணைந்து கொடுத்து வருகின்றனர்.

karthi suriya meiyazhagan movie


மெய்யழகன் படம்: நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா கூட்டணியில் உருவாகியுள்ள மெய்யழகன் படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை முன்னதாக 96 படம் மூலம் கவனம் பெற்றுள்ள இயக்குநர் பிரேம்குமார் இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படம் உருவாக்கியுள்ளது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத் தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களும் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது.

கார்த்தி -அரவிந்த்சாமி காம்போ: நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் லீட் கேரக்டரில் அரவிந்த்சாமியும் இணைந்துள்ளார். அவரின் பல பேட்டிகள் சமூக வலைதளங்களை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றன. சமூக அக்கறையுடனும் அவர் பல கருத்துக்களை முன் வைத்து வருகிறார். தன்னுடைய மகனுக்கு ஒன்று மற்றொருவர் மகனுக்கு ஒன்று என்று தன்னால் அட்வைஸ் கொடுக்க முடியாது என்றும் அனைவரையும் சமமாகவே நினைப்பதாகவும் அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் மெய்யழகன் படத்தின் கதை தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை என்றும் அவர் கூறியுள்ளார்.

karthi suriya meiyazhagan movie

சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர்: இந்நிலையில் நடிகர் அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்களுடன் இணைந்து கார்த்தி கொடுத்துள்ள பேட்டியொன்றில் அவரது அண்ணன் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு உடனடியாக பளீச்சென்று பதிலளித்துள்ளார் கார்த்தி. ரோலக்ஸ் கேரக்டர் தனக்கு சர்ப்பிரைசை கொடுத்ததாகவும் ஆனால் தான் சிறுவயதிலிருந்தே சூர்யாவை ரோலக்ஸ் கேரக்டரில்தான் பார்த்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் எவ்வளவு பெரிய வில்லன் என்று தனக்கு மட்டும்தான் தெரியும் என்றும் அவர் ஜாலியாக பேசியுள்ளார்.


மெய்யழகன் பட பிரமோஷன்கள்: இந்தப் படத்தில் கிராமத்தில் வெள்ளந்தியான கார்த்தி மற்றும் நகரத்திலிருந்து கிராமத்திற்கு செல்லும் அரவிந்த் சாமி என கதையை அமைத்துள்ளார் பிரேம்குமார். இந்தப் படத்தில் தனக்கும் கார்த்திக்கும் இடையிலான நட்பு மிகப்பெரிய அளவில் மாறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இசை வெளியீடு, பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவையும் ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளன. கார்த்தியை பருத்தி வீரன் படத்திலிருந்தே கிராமத்து கேரக்டர்களில் பார்க்க ரசிகர்கள் எப்போதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல இந்தப் படம் கார்த்திக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X