Don't Miss!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Finance
பள்ளி-க்கு 30 லட்சம், கல்லூரிக்கு 1 கோடி.. மிடில் கிளாஸ் பெற்றோர்கள் ஷாக்..!
- News
இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
- Technology
கம்மி விலையில் 50MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் அறிமுகமான சூப்பர் போன்.!
- Lifestyle
செவ்வாய் 66 நாட்கள் ரிஷப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
சூர்யா அதிகாரி.. நான் குற்றவாளி.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் கார்த்தி!
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தி இருவரும் கோலிவுட்டின் மிகச்சிறந்த நடிகர்களாக உள்ளனர்.
இருவரும் ஒருவர் மாற்றி மற்றொருவர் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகின்றனர்.
தற்போது கார்த்தியின் விருமன் படத்தை தயாரித்துள்ளார் நடிகர் சூர்யா. விரைவில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
என்ன
சொல்றீங்க...ஜெயிலர்
பொங்கல்
ரிலீஸ்
கிடையாதா?

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா சிறப்பான நடிகராக மாறியுள்ளார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் வெளியாகி வருகின்றன. தனக்கென தனியாக ரசிகர்கள் வட்டத்தை இவர் பெற்றுள்ளார். இவரது நடிப்பில் சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்
இதில் சூரரைப் போற்றும், ஜெய் பீம் படங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றன. இதேபோல பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசியது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படமும் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

ரோலக்சாக மிரட்டிய சூர்யா
இதனிடையே கடந்த 3ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் கேமியோ ரோலில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தக் கதாபாத்திரம் ரசிகர்களை மிரட்டியது. இந்தப் படத்தின் இந்தக் கேரக்டர் சிறிது நேரமே வந்தாலும் அனைத்து கதாபாத்திரங்களையும் தூக்கி சாப்பிட்டுள்ளது.

விக்ரம் 3ல் சூர்யா -கார்த்தி
இந்தப் படத்தின் தொடர்ச்சியாக விக்ரம் 3 படத்தில் லீட் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கைதிப் படத்தின் தொடர்ச்சியாக டில்லி என்ற கதாபாத்திரத்தில் கார்த்தியும் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் இணையும் முதல் படமாக விக்ரம் 3 அமையவுள்ளது.

தயாரிப்பிலும் பிசி
தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் அதிகமான படங்களையும் சூர்யா தயாரித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கார்த்தி நடிப்பில் விருமன் படத்தை அவர் தயாரித்துள்ளார். விரைவில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. மேலும் இந்தியில் சூரரைப் போற்று ரீமேக்கையும் எடுத்து வருகிறார்.

கார்த்தியின் நினைவலை
இந்நிலையில் சூர்யா மற்றும் கார்த்தியின் பள்ளி நாட்கள் குறித்து கார்த்தி பேசியுள்ள பழைய வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் பேசிய கார்த்தி, தான் பள்ளிக்கு ஆர்வமாக கிளம்பி ரெடியாக அமர்ந்திருந்தாலும் சூர்யா தாமதமாகத்தான் கிளம்புவார் என்று தெரிவித்துள்ளார்.
|
சூர்யாவால் குற்றவாளியான கார்த்தி
இதனால் பள்ளி துவங்கியபின்பு சென்று அங்கு கைதியை போல நிற்க வேண்டிவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தன்னுடன் வந்த சூர்யா,அங்கு தாமதமாக வருபவர்களை தடுக்கும் நபராக பேட்ஜ் ஒன்றை அணிந்துக் கொண்டு நிற்பார் என்றும் இதனால் அவர் அதிகாரியாகவும் தான் குற்றவாளியாகவும் மாறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

யுவனுடன் மைதானத்தில் ஓட்டம்
இதனால் தாமதமாக சென்ற தான் பள்ளி மைதானத்தை சுற்றி 3 முறை ஓட வேண்டிவரும் என்றும் தன்னுடன் இணைந்து அங்கு படித்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் தாமதமாக வந்து மூன்று முறை ஓடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யுவன் தினமும் தாமதமாகத்தான் பள்ளிக்கு வருவார் என்ற சீக்ரெட்டையும் கார்த்தி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

கார்த்திக்கு வில்லனாக விருப்பம்
முன்னதாக ஒரு வீடியோவில் சூர்யா, தன்னுடைய தம்பி எப்போதுமே தன்னுடைய தந்தை உள்ளிட்டவர்களின் செல்லப்பிள்ளை மற்றும் சமர்த்தான பிள்ளை என்றும் தான்தான் எப்போதும் குறும்புடன் நடந்துக் கொள்வேன் என்றும் அதனால் கார்த்திக்கு வில்லனாக நடிக்கவே தான் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.