இந்த வார்த்தையைக் கேட்க 8 வருஷம் ஆகியிருக்கு.. கார்த்தி உருக்கம்

By Rajeswari

Recommended Video

எனக்கும் சூர்யாவிற்கும் வெற்றி எளிதில் கிடைக்கவில்லை : கார்த்தி அதிரடி-வீடியோ

சென்னை: உதயா கதாநாயகனாக நடிக்கும் 'உத்தரவு மகாராஜா' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி, தனக்கும் சூர்யாவிற்கும் வெற்றி என்பது எளிதில் கிடைக்கவில்லை என்று மனம் திறந்து பேசினார்.

அந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கார்த்தி கூறுகையில்:

Actor karthi open his mind that it is not easy for him and Surya to win.

உதயா, பிரபுவுடன் இணைந்து கதாநாயகனாக நடித்துள்ள உத்தரவு மகாராஜா படம் வெற்றிபெறவேண்டும் . சினிமாவில் அங்கீகாரம் கிடைக்க அவர் நம்பிக்கையோடு காத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். புதிய கதாநாயகி நடித்து இருக்கிறார். இதற்கு பெரிய மனது வேண்டும். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம். இந்த துறையில் ஓடுகிற குதிரையில்தான் பணம் கட்டுவார்கள்.

எங்களை சுற்றி பல பேர் தனது மகன்கள் இருவரையும் சிவகுமார் சுலபமாக சினிமாவுக்குள் கொண்டு வந்துவிட்டார் என்று பேசுகின்றனர், ஆனால் அது உண்மையல்ல, நானும் சூர்யாவும் சுலபமாக இங்கு வந்துவிடவில்லை.

பல ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து தான் இந்த துறையில் இவ்வளவு தூரத்திற்கு வந்தோம், சினிமாவில் முதலில் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது காத்திருப்பது எப்படி என்பதைத்தான். ஒரு நடிகனின் முதல் வெற்றிக்கும் அடுத்த வெற்றிக்கும் இடையில் பெரிய காத்திருப்பு உள்ளது.

சிறுத்தைக்கு பிறகு நான் சமீபத்தில் நடித்து வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்து தான் பலரும் நான் சிறப்பாக நடித்து இருக்கிறேன் என்று கூறினார்கள், இடையில் எவ்வளவோ படம் நடித்தேன். ஆனாலும் கடைக்குட்டி சிங்கம்தான் சிறந்த படம் என்கின்றனர் மக்கள். இந்த வார்த்தையை கேட்பதற்கு 8 வருடங்கள் ஆகி இருக்கிறது." என்று பேசினார்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் அருண்குமார், விவேக், பொன் வண்ணன், ஸ்ரீமன், டைரக்டர் விஜய், தயாரிப்பாளர்கள் கதிரேசன், ஏ.எல்.அழகப்பன், எஸ்.எஸ்.துரைராஜ், கே.ராஜன், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X