PS 2 Karthi: ரோலக்ஸ் இல்ல.. ரோலக்ஸ் சார்.. பொன்னியின் செல்வன் 2 பிரமோஷனில் கார்த்தி குதூகலம்!
கொச்சி :பொன்னியின் செல்வன் டீம் தற்போது கேரளாவில் தன்னுடைய பிரமோஷனல் டூரை மேற்கொண்டுள்ளது. நாளைய தினம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை ஆந்திராவில் மேற்கொள்ளவுள்ளது.
சென்னையில் துவங்கப்பட்ட பிரமோஷனல் டூர், கோவை, டெல்லி, கொச்சி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் ரிலீசுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ரோலக்ஸ் குறித்து பேசிய கார்த்தி : நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அடுத்த வாரத்தில் படத்தின் இரண்டாவது பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
முதல் பாகம் அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வசூலிலும் மிரட்டியது. இதேபோல இரண்டாவது பாகமும் மிகச்சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தை காட்டிலும் மிகச்சிறப்பான பிரமோஷன்களை படக்குழு கொடுத்து வருகிறது. படத்தின் நடிகர், நடிகைகளும் பிரமோஷனல் டூரை நடத்தி வருகின்றனர். சென்னையில் படத்தின் ஆன்த்தத்தை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட நிலையில், அங்கு துவங்கி, கோவை, டெல்லி, கொச்சி என தங்களது பிரமோஷனல் டூரை தொடர்ந்துள்ளனர். i
இன்றைய தினம் பெங்களூருவில் பிரமோஷன்ஸ் நடைபெறவுள்ள நிலையில், நாளைய தினம் ஆந்திராவில் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தன்னுடைய கனவு பிராஜெக்டடான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களின் சூட்டிங்கையும் 155 நாட்களில் நடத்தி முடித்துள்ளார் மணிரத்னம். சரியான திட்டமிடல் மற்றும் அந்த கதை குறித்த விருப்பம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

இந்நிலையில் கொச்சியில் நடைபெற்ற பிரமோஷனல் நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்தியிடம் தொகுப்பாளர் அவருடைய அண்ணன் எங்கேயிருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து உற்சாகமடைந்த கார்த்தி, ரோலக்ஸ் இல்லை, ரோலக்ஸ் சார் என்று அந்தப் படத்தின் டயலாக்கை சுட்டிக்காட்டி குறிப்பிட்டார். மேலும் ரோலக்ஸ் தற்போது கொடைக்கானலில் சூட்டிங்கில் உள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது கங்குவா படத்தின் சூட்டிங்கிற்காக சூர்யா, கொடைக்கானலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் 50 சதவிகித சூட்டிங் நடத்தப்பட்டுள்ள நிலையில், கொடைக்கானலில் தொடர்ந்து சில வாரங்கள் சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே கார்த்தியும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங்கும் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரமோஷன்களில் தற்போது கார்த்தி பங்கேற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











