தீபாவளிக்கு சர்தார் ரிலீஸ்.. நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடணும்.. கார்த்தி கூல் பேட்டி!

சென்னை : நடிகர் கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் ஒரு மாத இடைவெளிகளில் வெளியாகிறது.

விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நாளைய தினம் பொன்னியின் செல்வன் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

தொடர்ந்து தீபாவளியையொட்டி சர்தார் படமும் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தல் இரட்டை வேடங்களில் கார்த்தி நடித்துள்ளார்.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி தன்னுயை கேரியரின் துவக்கமாக பருத்தி வீரன் படத்தில் நடித்திருந்தார். முதல் படமே ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் தன்னுடைய தெனாவட்டான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். தொடர்ந்து எல்லாவிதமான கெட்டப்புகளிலும் நடித்துவிட்டார்.

கிராமத்து கெட்டப்பில் கார்த்தி

கிராமத்து கெட்டப்பில் கார்த்தி


சமீபத்தில் தன்னுடைய அண்ணன் சூர்யா இயக்கத்தில் விருமன் படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் பருத்தி வீரன், கொம்பன் போன்ற படங்களில் நடித்திருந்த கெட்டப்பை ரசிகர்களுக்கு நியாபகப்படுத்தினார். கொம்பன் படத்தை இயக்கிய முத்தையாதான் இந்தப் படத்தையும் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் அதீதி ஷங்கர் அறிமுகமாகியுள்ளார்.

வந்தியத் தேவன் கேரக்டர்

வந்தியத் தேவன் கேரக்டர்

தொடர்ந்து வந்தியத் தேவனாக கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் நாளைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்தப் படத்தின் பிரமோஷனல் டூரில் சக நடிகர்களுடன் பங்கேற்றார் கார்த்தி. சென்னையில் துவங்கி, திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி என இந்தப் பயணம் நீண்டது.

நாளை ரிலீசாகும் பொன்னியின் செல்வன்

நாளை ரிலீசாகும் பொன்னியின் செல்வன்

இதனிடையே நாளைய தினம் படத்தின் ரிலீசையொட்டி சென்னை திரும்பியுள்ளது படக்குழு. படத்தின் ரிலீசுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி, படத்தின் பல விஷயங்களை, பிரமோஷனல் டூரின்போது தான் எதிர்கொண்ட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். இந்தப் படத்தின்மூலம் கல்கியின் வரலாற்று நாவலை படிக்கும் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்தார் தீபாவளி ரிலீஸ்

சர்தார் தீபாவளி ரிலீஸ்

மேலும் வரும் தீபாவளியையொட்டி சர்தார் படம் வெளியாகவுள்ளதால், நிற்கக்கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த வேலைகளை பார்க்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் படங்கள் வேறு மாதிரியான படங்கள் என்றும் அதிகமான உழைப்பை எடுத்துக் கொண்ட படங்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

பிரமோஷன்களில் பிசி

பிரமோஷன்களில் பிசி

இந்தப் படங்களின் பிரமோஷன்களில் தற்போது பிசியாக உள்ள கார்த்தி அடுத்ததாக ராஜு முருகனின் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் இணையவுள்ளார். அரசியல் களத்தை மையமாக கொண்ட இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் சுல்தான் படத்தை தொடர்ந்து ராஷ்மிகாக மீண்டும் இணைவுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X