யுவன் மேஜிக்.. இளையராஜா பாடிய டைட்டில் சாங்.. ஆசைகளை தீர்த்துக்கொண்ட கார்த்தி!
சென்னை : நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் விருமன்.
இந்தப் படத்தின்மூலம் இரண்டாவது முறையாக கார்த்தி -முத்தையா கூட்டணி அமைந்துள்ளது.
முதல்முறையாக கொம்பன் படத்தில் கார்த்தியை இயக்கியிருந்தார் முத்தையா. அந்தப் படத்தில் லஷ்மி மேனன் ஜோடி சேர்ந்திருந்தார்.

கார்த்தியின் விருமன்
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் முத்தையா இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் விருமன். கொம்பன் படத்தில் முதல்முறையாக இணைந்த இந்தக் கூட்டணி அந்தப் படத்தை சூப்பர் ஹிட்டாக்கியது. இந்நிலையில் தற்போது அதேபோன்ற கிராமத்து கெட்டப்பில் இந்தப் படத்திலும் களமிறங்கியுள்ளார் கார்த்தி.

சூர்யா தயாரிப்பு
இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது. படம் வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கான பிரமோஷன்கள் கார்த்தி, அதிதி உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தற்போது மலேசியாவில் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கிராமத்து கெட்டப்பில் அதீதி
இந்தப் படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்தப் படத்தின் மூலம் தமிழ் இன்டஸ்ட்ரியில் அறிமுகமாகி பிரபல இயக்குநர் ஷங்கரின் மகளான அதீதி ஷங்கர். இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் தன்னை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் அதீதி.

கிராமத்து கதைக்களம்
எப்போதும் கிராமத்து கதையுடன் களமிறங்கும் இயக்குநர் முத்தையா, இந்த முறையும் அதேபோன்ற கதைக்களத்துடன்தான் விருமன் படத்தை கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு மதுரையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் கார்த்தி, யுவன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

டைட்டில் பாடலை பாடிய இளையராஜா
இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், பாடல்களை கவனத்தைப் பெற்றுள்ளன. இதனிடையே இந்தப் படத்திற்காக பிரமோஷன்களில் நடிகர் கார்த்தி தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். அப்போது இந்தப் படத்தின் டைட்டில் பாடலை இளையராஜா பாடியுள்ளது தனக்கு மிகப்பெரிய சர்ப்பிரைஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.

யுவனின் மேஜிக்
இந்த டைட்டில் பாடல் மிகவும் மனதை உருக்குவதாக அமைந்துள்ளதாகவும் கார்த்தி குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தப் படத்தில் யுவனின் மேஜிக் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ஒரு படம் யுவனுக்கு மிகவும் பிடித்தமானதாக மாறிவிட்டால் நெருக்கமாக அமைந்தால் இந்த மேஜிக் அந்தப் படத்தில் உருவாகும் என்றும் கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நாள் ஆசைகள்
இந்தப் படத்தில் யுவன் அனைவருடைய இதயத்தையும் உருக வைக்கும் வகையில் பாடல்களை கொடுத்துள்ளதாகவும் கார்த்தி குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தின்மூலம் தனது நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் தீர்ந்துள்ளதாகவும் கார்த்தி குறிப்பிட்டுள்ளார். அதேபோல ரசிகர்களின் ஆசைகள் அனைத்தையும் இந்தப் படம் தீர்க்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











