Karthi: மீண்டும் இணையும் மெட்ராஸ் பட சூப்பர் காம்போ.. எப்போ அறிவிப்புன்னு பாக்கலாங்களா?

சென்னை: நடிகர் கார்த்தி மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியான படம் மெட்ராஸ். வட சென்னை மக்களின் வாழ்வியலை படம்போட்டு காட்டியது இந்தப் படம். கார்த்திக் கேரியரில் பெஸ்டாக அமைந்தது.

படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்தரின் தெரேசா நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Actor Karthi -Pa Ranjith combination reunites again for next movie

மீண்டும் இணையும் மெட்ராஸ் பட கூட்டணி: நடிகர் கார்த்தி, கேத்தரீன் தெரசா, கலையரசன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியான படம் மெட்ராஸ். பா ரஞ்சித் இயக்கியிருந்த இந்தப் படத்தில் வட சென்னை மக்களின் வாழ்வியலை படம்போட்டு காட்டியிருந்தார் பா ரஞ்சித். இந்தப் படத்தில் கார்த்தி தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து, சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இநத்ப் படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படம் கார்த்திக்கும் இயக்குநர் பா ரஞ்சித்திற்கும் மிகப்பெரிய வரவேற்பையும் கேரியரையும் தமிழில் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் இணைந்திருந்த டீம் தற்போது அடுத்தப்படத்திற்காக மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Karthi -Pa Ranjith combination reunites again for next movie

நடிகர் கார்த்தி, இயக்குநர் பா ரஞ்சித் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் புதிய படத்தில் இணையவுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் விரைவில் இந்தப் படத்தின் அறவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மெட்ராஸ் என்ற சிறப்பான படத்தை கொடுத்துள்ள கார்த்தி -பா ரஞ்சித் காம்பினேஷன் இணைந்து அடுத்ததாக எந்த மாதிரியான படத்தை கொடுப்பார்கள், அல்லது மெட்ராஸ் படத்தின் 2வது பாகமாக அது இருக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்தப் படத்தின் அறிவிப்பு அடுத்த ஆண்டில்தான் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஜப்பான் படத்தை முடித்துள்ள கார்த்தி, நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இநத்ப் படத்தை தொடர்ந்து தன்னுடைய கார்த்தி27 படத்திற்காக 96 புகழ் இயக்குநர் பிரேம்குமாருடன் இணையவுள்ளார் கார்த்தி. இந்தப் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு, பா ரஞ்சித் படத்தில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல பா ரஞ்சித்தும் தங்கலான் படத்தை தொடர்ந்து சார்ப்பட்டா பரம்பரை 2 படத்தை இயக்கவுள்ளார்.

முன்னதாக பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த சார்ப்பட்டா பரம்பரை படத்திலேயே நடிகர் கார்த்திதான் நடிக்கவிருந்தார். அவரிடம் கதையை சொல்லியிருந்தார் பா ரஞ்சித். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படத்தில் கார்த்தியால் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த காம்பினேஷன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக சார்பட்டா பரம்பரை 2 படத்தை பா ரஞ்சித் இயக்கவுள்ளார்.

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. படத்தில் சுதந்திர போராட்ட காலகட்டதை கதைக்களமாக கொண்ட இந்தப் படத்தின் இருவேறு கெட்டப்புகளில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். அவருக்கு இந்தப் படம் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X