அன்புத் தம்பிகளே.. இதுதான் நீங்கள் எனக்கு தரும் பிறந்த நாள் பரிசு.. நடிகர் கார்த்தி உருக்கமான கடிதம்
சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகர் கார்த்தி உருக்கமாக கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிவகுமாரின் இளைய மகன் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
சினிமா இயக்குநராக ஆசைப்பட்ட கார்த்தி, இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக சேர்ந்தார்.

உதவி இயக்குநர்
சூர்யா, மாதவன், சித்தார்த் நடிப்பில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அந்தப் படத்தில் சிறு கதாப்பாத்திரத்திலும் நடித்தார் கார்த்தி.

பருத்திவிரன் படம்
இருந்த போதும் படத்தில் நடிக்க கார்த்திக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. இதனை தொடர்ந்து அமீரின் பருத்தி வீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் கார்த்தி. முதல் பந்திலேயே சிக்ஸர் என்பது போல முதல் படத்திலேயே பெரும் பிரபலமானார்.

வெற்றிப் படங்கள்
பின்னர் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகு ராஜா, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், தோழா, காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி என பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

இன்று பிறந்தநாள்
கடைசியாக அவரது நடிப்பில் சுல்தான் படம் வெளியானது. தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று தனது 44வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார் நடிகர் கார்த்தி.

ரசிகர்களுக்கு கடிதம்
அவரது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது பிறந்த நாளில் தன்னுடைய ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதுதான் எனக்கு தரும் பரிசு
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, அன்புத் தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்!இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுகு மிகக் கடுமையாக உள்ளது. அரசாங்கமும் மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல் தனி மனித இடைவெளியை கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே இந்தப் பிறந்தநாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்! நன்றி என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











