Karthi: ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா படத்துக்கு நடிகர் கார்த்தி ஆதரவு.. ஓ அதுதான் மேட்டரா?
சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான ஃபர்ஹானா படத்தை நடிகர் கார்த்தி தற்போது பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.
தி கேரளா ஸ்டோரி படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக அந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு வெளியான நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அந்த படம் பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்டது.
இந்நிலையில், அதே வேகத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா படம் வெளியான நிலையில், பல திரையரங்குகளில் அந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டும் ரசிகர்கள் அந்த படத்தை பார்க்க ஆர்வம் செலுத்தாமலும் உள்ளனர்.

சர்ச்சை இல்லையென பிரச்சாரம்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் நடித்த ஃபர்ஹானா படத்தில் எந்தவொரு மத சர்ச்சைகளும் இல்லை என படக்குழுவினர் பிரச்சாரம் செய்தாலும் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவே இல்லை.
முதல் நாள் மொத்தமே 24 லட்சம் தான் வசூல் ஆனதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நடிகர் கார்த்தி இந்த படத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஃபர்ஹானாவை பாராட்டிய கார்த்தி: பொன்னியின் செல்வன் 2விலும் வந்தியத்தேவனாக நடித்து மாஸ் காட்டிய கார்த்தி அடுத்து ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா படத்தை பாராட்டி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.
பொருளாதாரம் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் குடும்ப உறவில் கொடுக்கும் மிகப்பெரிய அழுத்ததிற்கு எதிரான படமாகத்தான் ஃபர்ஹானா உள்ளது. இந்த விவகாரத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் ஃபர்ஹானா படம் கையாண்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன் மற்றி கிட்டி சார் என அனைவரும் சிறப்பாக தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர். இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்துக்கள் என நடிகர் கார்த்தி பாராட்டி உள்ளார்.

தயாரிப்பாளருக்கு சாதகமாக: எஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸில் சுல்தான் உள்ளிட்ட பல படங்களில் நடிகர் கார்த்தி நடித்துள்ள நிலையில், தயாரிப்பாளர்களுக்கு ஃபர்ஹானா படத்தின் மூலம் நஷ்டம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக நட்பு ரீதியாக இந்த பாராட்டு ப்ரமோஷனை கார்த்தி நடத்தி உள்ளாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











