Actor Karthi: முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கார்த்தி -பிரேம் கூட்டணி.. அப்டேட் இதோ!

சென்னை: நடிகர் கார்த்தியின் ஜப்பான் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன.

கடந்த தீபாவளியில் கார்த்தியின் சர்தார் படம் வெளியாகி அதிரடி வெற்றி பெற்ற நிலையில், இந்த தீபாவளிக்கு ரிலீசான ஜப்பான் படம் சொதப்பலாகியுள்ளது.

Actor Karthi -PremKumar combination movie seems no songs

இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் கார்த்தி. தற்போது 96 பட இயக்குநருடன் கமிட்டாகி நடித்து வருகிறார் கார்த்தி.

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி பருத்தி வீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி ஆனவர். முன்னதாக மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக ஆயுத எழுத்து படத்தில் பணிபுரிந்துள்ளார். இயக்குநராகும் கனவுடன் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த கார்த்தி, தன்னுடைய அப்பா மற்றும் அண்ணனின் அறிவுறுத்தலின்பேரில் நடிகரானார். முதல் படத்திலேயே கரடுமுரடான கேரக்டரில் நடித்து அனைவைரயும் கவர்ந்தவர் இவர்.

வித்தியாசமான கேரக்டர்கள்: தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிக்காமல் வித்தியாசமான ஜானர்களில் தன்னை இணைத்துக் கொண்டவர் கார்த்தி. கார்த்தியுடன் ஒரு படம் செய்துவிட்டால் அவர், கோலிவுட்டில் பிசியான டைரக்டராகிவிடுவார் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளார் கார்த்தி. அதற்கு லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல இயக்குநர்களை கைகாட்டலாம். அந்த வகையில் அடுத்தடுத்த வித்தியாசமான டைரக்டர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் கார்த்தி.

சொதப்பிய ஜப்பான் படம்: சமீபத்தில் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான கார்த்தியின் ஜப்பான் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. கடந்த தீபாவளிக்கு வெளியான சர்தார் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங், அடுத்த ஆண்டில் துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு மிகுந்த எதிர்பார்ப்புகளடன் வெளியான ஜப்பான் படம் சொதப்பலான ரிசல்டையே கொடுத்துள்ளது.

டைரக்டர் பிரேம் -கார்த்தி கூட்டணி: இந்நிலையில் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் கார்த்தி. தற்போது 96 படத்தின் இயக்குநர் பிரேமுடன் இணைந்து அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து முடிந்துள்ளது. 96 படத்தின் முக்கியமான பலமாக அந்தப் படத்தின் பாடல்கள் அமைந்தன. இந்நிலையில் தற்போது உருவாகிவரும் கார்த்தி -பிரேம் பிராஜெக்ட்டில் பாடல்களே இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

பாடல்கள் இல்லாத படம்: இதனால் இந்தப் படத்தில் எப்படியாவது பாடல்களை இடம்பெற செய்ய கார்த்தி மற்றும் சூர்யா திட்டமிட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் அரவிந்த் சாமியும் கமிட்டாகியுள்ள நிலையில இந்தப் படத்தில் சூழ்நிலைதான் வில்லன் என்று முன்னதாக படக்குழு சார்பில் கூறப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X