சர்தார் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..ஹாட்ரிக் அடித்தாரா கார்த்தி!

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்தார் திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று திரையரங்கில் வெளியானது.

இதில் கார்த்தி ஜோடியாக ராசி கன்னா, ரஜிஷா விஜயன், லைலா, பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே, முரளி ஷர்மா, முனிஷ்காந்த், இளவரசு மற்றும் யுகி சேது ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியான சர்தார் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. கார்த்தி நடித்த வந்தியத்தேவன் கதாபாத்திரம் அவருக்கு நன்றாக பொருந்தி இருந்தது. அந்த கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருந்தார் கார்த்திக்.

சர்தார்

சர்தார்

பொன்னியின் செல்வன் படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு கார்த்தி நடித்த திரைப்படம் சர்தார். இதில், அப்பா - மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். காவல்துறை ஆய்வாளராகப் பணிபுரியும் விஜய பிரகாஷ் ஒரு பப்ளிசிட்டி விரும்பி. காவல்துறை குறித்த ஒரு விஷயம் ட்விட்டரில் டிரெண்டானால் அதற்கு அவரே காரணமாக இருப்பார். அப்படி ஒரு விளம்பரத்துக்காக தன் பார்வைக்கு வரும் ஒரு தேசத்துரோக வழக்கைக் கையில் எடுக்கிறார். முதல் பாதியில் சர்தார் யார்? தண்ணீரால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை படம் விரிவாக அலசுகிறது.

ரிலீஸுக்கு முன்பே

ரிலீஸுக்கு முன்பே

சர்தார் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா என பல இடங்களில் நடந்தது. 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது. சர்தார் திரைப்படம் தமிழகத்தில் 600 திரையரங்கிலும், ஆந்திராவில் 475 திரையரங்கிலும், உலகம் முழுவதும் 1500 திரையரங்கிலும் வெளியானது. சர்தார் படம் ரிலீக்கு முன்பே 1 கோடியைத் தொட்டநிலையில், நேற்று 78000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகின.

முதல் நாள் வசூல்..

முதல் நாள் வசூல்..

சர்தார் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் உலகம் முழுவதும் 6 கோடி முதல் 6.5 கோடி வசூலாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் முதல் நாள் வசூல் 2 கோடியாக உள்ளது. சனி மற்றும் ஞாயிறு, தீபாவளி என தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் படம் நிச்சயம் எதிர்பார்த்த வசூலை எட்டும் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X