பொன்னியின் செல்வன் அடுத்தடுத்த போஸ்டர்கள்.. கார்த்தி போட்ட ஹாப்பி ட்வீட்!
சென்னை : மணிரத்னத்தின் இயக்கத்தில் அவரது கனவு ப்ராஜெக்டாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம்.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வரும் 30ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் பிரமோஷன்கள் மிகவும் பிரம்மாண்டமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

பொன்னியின் செல்வன் படம்
நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் 30ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது பொன்னியின் செல்வன். மிகவும் பிரம்மாண்டமான வகையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

மணிரத்னத்தின் கனவு ப்ராஜெக்ட்
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் மணிரத்னத்தின் கனவு ப்ராஜெக்ட்டாக தற்போது வெளியாக உள்ளது. முன்னதாக இந்த படைப்பை தயாரிக்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பிரபலங்களின் முயற்சிகள் பலிக்காத நிலையில் தற்போது இதை சாத்தியமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

பிரம்மாண்டமான வெளியீடுகள்
இந்தப் படம் 2 பாகங்களாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் முதல் பாகம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் இதுவரை பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு வரும் 6ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

அடுத்தடுத்த கேரக்டர்கள்.. போஸ்டர்கள்
முன்னதாக கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் விக்ரம் ஆகியோரின் வந்தியத்தேவன் ராஜராஜ சோழன் மற்றும் ஆதித்ய கரிகாலம் ஆகிய கேரக்டர்களின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது சுந்தர சோழன், செம்பியன் மாதேவி மற்றும் மதுராந்தகன் கேரக்டர்களில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ், ஜெயசித்ரா, ரகுமான் ஆகியோரின் போஸ்டர்களும் வெளியாகியுள்ளன.

பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி
இதனிடையே பூங்குழலியாக நடித்துள்ள ஐஸ்வர்யா லெக்ஷ்மியின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கேரக்டர்கள் அனைத்தும் இதுவரை வெளியான டீசர் உள்ளிட்டவற்றில் வெளியாகாத நிலையில் தற்போது ஒவ்வொரு கேரக்டராக வெளியிடப்பட்டு கவனம் பெற்று வருகிறது.

கார்த்தி மகிழ்ச்சிப்பதிவு
vஇந்நிலையில் அடுத்தடுத்த இந்த போஸ்டர்கள் ரசிகர்களை மட்டுமில்லாமல் நடிகர் கார்த்தியையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த போஸ்டர்களுக்கு வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ள கார்த்தி வரலாறு என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சிப்பதிவை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











