Karthi :கதை புரியலன்னு சொன்னா பிச்சிப்புடுவேன்.. பிடித்த டயலாக் குறித்து பேசிய கார்த்தி!

சென்னை : நடிகர் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது பொன்னியின் செல்வன் 2.

படத்தின் முதல் பாகம் ஏற்படுத்தியுள்ள வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பை தொடர்ந்து இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் நடிகர், நடிகைகள் தற்போது படத்திற்கான பிரமோஷனல் டூரில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கோவையை தொடர்ந்து டெல்லியிலும் படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளன.

Actor Karthi revealed his favourite and deleted dialogue of Ponniyin selvan 2 in his promotional tour

பிடித்த டயலாக் குறித்து பேசிய கார்த்தி : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியானது பொன்னியின் செல்வன் படம். இயக்குநர் மணிரத்னத்தின் கனவு பிராஜக்ட்டாக கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி படம் சர்வதேச அளவில் ரிலீசாகி மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. படம் வசூலையும் குவிக்கத் தவறவில்லை. இதையடுத்து வரும் 28ம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது.

இதையொட்டி முதல் பாகத்தில் செய்ததை போலவே தற்போதும் படத்தின் நடிகர்கள் நடிகைகள் படத்திற்கான பிரமோஷனல் டூரில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் படத்திற்கான பிரமோஷனல் டூரை படத்திற்கான ஆன்த்தமுடன் துவங்கிய படக்குழுவினர், தொடர்ந்து கோவை, டெல்லி என தங்களது பிரமோனல் டூரை தொடர்ந்து வருகின்றனர். செல்லும் இடங்களில் எல்லாம், அவர்களை அந்த கேரக்டர்களாகவே ரசிகர்களை பார்த்து வருகின்றனர்.

குறிப்பாக படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்திக்கு இந்தப்படம் அதிகமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. அவர் பிரமோஷனல் டூர் செல்லும் இடங்களில் அவருக்கான ரசிகர்களின் ஆதரவு மிகச்சிறந்த வகையில் காணப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல அவரும் படம் குறித்தும், தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்தும் பல்வேறு விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது படத்தில் டெலிட் செய்யப்பட்ட டயலாக் குறித்து அவர் பேசியுள்ளார்.

Actor Karthi revealed his favourite and deleted dialogue of Ponniyin selvan 2 in his promotional tour

படத்தில் வந்தியத்தேவன் ஒரு இடத்திற்கு பயணமாகும் சூழலில், வழியில் பெரியவர் ஒருவர், அவரைப்பார்த்து, எங்கு செல்கிறீர்கள் என்று கேட்பதாகவும் ஒரு சொத்து தகராறை தீர்த்து வைக்க செல்வதாக வந்தியத்தேவன் கூறுவதாக அமையும் என்றும், சொத்து அண்ணன் பையனுக்கா அல்லது தம்பி பேரனுக்கா என்பது குறித்து தகராறு உள்ளதாக வந்தியத்தேவன் குறிப்பிடுவதாக அமையும் என்றும் இந்த டயலாக் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கார்த்தி பொன்னியின் செல்வன் பிரமோஷனல் டூரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒரே டயலாக்கில் ஜெயமோகன் பொன்னியின் செல்வன் கதையை சொல்லிவிட்டதாக பாராட்டிய கார்த்தி, இதுகுறித்து ரசிகர்களுக்கு விவரித்து, கதை புரிந்ததா என்று கேள்வி எழுப்பினார். உடன் அப்புறம் புரியவில்லை என்று சொன்னால் பிச்சிப்புடுவேன் என்றும் கார்த்தி கூறியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து கூட்டத்தினர் மிகுந்த ஆர்ப்பரிப்புடன் கார்த்தியின் இந்தப் பேச்சை ரசித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X