PS2 :பொன்னியின் செல்வன் 2 படத்தை குடும்பத்துடன் பார்த்த சூர்யா.. என்ன சொன்னார் தெரியுமா?

மும்பை : நடிகர்கள் கார்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது பொன்னியின் செல்வன் 2 படம்.

படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையிலும் இரு தினங்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலை சர்வதேச அளவில் எட்டியுள்ளதாக தயாரிப்புத் தரப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

படத்திற்காக முன்னதாக கடந்த இரு மாதங்களாக படக்குழுவினர் சிறப்பான பிரமோஷன்களை செய்திருந்தனர்.

Actor Karthi revealed that Suryas comment after watching ponniyin selvan 2 movie

பொன்னியின் செல்வன் 2 குறித்த சூர்யா கமெண்ட் : நடிகர்கள் காத்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஷோபிதா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது பொன்னியின் செல்வன் 2 படம். இந்தப் படத்தின் முதல் பாகம் மிகச்சிறந்த விமர்சனங்களையும் வசூலையும் எட்டிய நிலையில் இரண்டாவது பாகத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு நிலவியது.

முன்னதாக படத்திற்கு கடந்த இரு மாதங்களாக படக்குழுவினர் மிகப்பெரிய பிரமோஷன்களை கொடுத்தனர். நடிகர், நடிகைகளும் தொடர்ந்து பிரமோஷனல் டூரை கோவை, டெல்லி, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் நடத்தியிருந்தனர். சென்ற இடங்களில் எல்லாம் இவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டது. பிரீ ரிலீஸ் நிகழ்வுகளையும் நடத்தினர். இவையெல்லாம் படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்தன.

இந்நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனால் இரு தினங்களிலேயே படத்தின் வசூல் 100 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்திலும் வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார். இந்நிலையில் படத்தை தன்னுடைய அண்ணன் சூர்யா தன்னுடைய மனைவி மற்றும் மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினருடன் சென்று பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார் கார்த்தி.

Actor Karthi revealed that Suryas comment after watching ponniyin selvan 2 movie

படத்தை பார்த்த சூர்யா, தமிழ் சினிமாவால் சாதிக்க முடியும் என்று கூறியதாக கார்த்தி பகிர்ந்துள்ளார். படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் சூர்யா பாராட்டுக்களை தெரிவித்ததாகவும் கார்த்தி கூறியுள்ளார். மேலும் தங்களுக்கு பிடித்த புத்தகத்தின் கேரக்டர்கள் உயிருடன் வருவதை பார்க்க அவரது குடும்பத்தினர் மிகுந்த ஆர்வம் காட்டியதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார். அருண்மொழி வர்மனாக தன்னுடைய தந்தை நடிக்கவிருந்ததையும் கார்த்தி நினைவு கூர்ந்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் வந்தியத்தேவனாக நடித்தது தான் செய்த பாக்கியம் என்று கார்த்தி தொடர்ந்து பல பேட்டிகளில் கூறி வருகிறார். படத்தில் இவரது இயல்பான நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. கார்த்தி -த்ரிஷா காதல் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்து படத்திற்கு வலு கூட்டியுள்ளளது. மணியுடன் இணைந்து கார்த்திக் இந்த படத்தில் மேஜிக் செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X