Karthi :பெருமைப்பட்ட அப்பா & அண்ணா.. கத்திய அம்மா.. பிரமோஷனில் கார்த்தி சொன்ன விஷயம்!
சென்னை : நடிகர் கார்த்தி உள்ளிட்டவர்கள் தற்போது பொன்னியின் செல்வன் 2 பிரமோஷனல் டூரில் இணைந்துள்ளனர். இன்றைய தினம் கொச்சி சென்றுள்ளனர்.
முன்னதாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆன்த்தமுடன் தங்களது பிரமோஷனல் டூரை துவக்கிய படத்தின் நடிகர், நடிகைகள், கோவை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த பிரமோஷன்களின்போது படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யங்களை மட்டுமில்லாமல் தங்களது அடுத்தடுத்த படங்கள், சொந்த வாழ்க்கை உள்ளிட்ட விஷயங்களையும் பகிர்ந்துள்ளனர்.

குடும்பத்தினர் பாராட்டிய தருணம் குறித்து கார்த்தி : நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஷோபிதா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டவர்கள் தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரமோஷனல் டூரில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கோவை, டெல்லியில் அவர்களது பிரமோஷனல் டூர் முடிந்துள்ள நிலையில், இன்றைய தினம் கொச்சி சென்றுள்ளனர். இந்த நிகழ்வின்போது நடிகர் ஜெயராம் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் அதிகமான வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
செல்லும் இடங்களில் எல்லாம் பத்திரிகையாளர்களையும் பொன்னியின் செல்வன் 2 டீம் சந்தித்து வருகிறது. இந்த நிகழ்வுகளில் படத்தின் இயக்குநர் மணிரத்னமும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் இளையராஜா, வேள்பாரி படம் உள்ளிட்ட பல விஷயங்களை இயக்குநர் மணிரத்னம் பகிர்ந்துள்ளார். இதேபோல ஜெயராம், கார்த்தி, விக்ரம், த்ரிஷா உள்ளிட்டவர்களுக்கும் ரசிகர்களை மற்றும் பத்திரிகையாளர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் த்ரிஷாவிடம் லியோ படம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதேபோல அவரது திருமணம் குறித்தும் அதிகமாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதேபோல நடிகர் விக்ரமிடம் தங்கலான் படம், பொன்னியின் செல்வன் படத்தில் அவரது ஆதித்த கரிகாலன் கேரக்டர் உள்ளிட்ட கேள்விகளும், கார்த்தியிடம் அவரது வந்தியத்தேவன் கேரக்டர் உள்ளிட்ட கேள்விகளும் அதிகமாக கேட்கப்பட்டது.

இந்நிலையில் இதுபோன்ற ஒரு பிரமோஷனலில் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு அவரது குடும்பத்தினர் எப்படி ரியாக்ட் செய்தார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மிகவும் உற்சாகமாக பதிலளித்த கார்த்தி, இந்தப் படத்தை பார்த்துவிட்டு தன்னுடைய தந்தை சிவக்குமார், மிகுந்த பெருமை கொண்டதாக தெரிவித்தார். அவர் எம்ஜிஆர் காலத்தில் இந்தப் படத்திற்கான முயற்சி எடுக்கப்பட்டபோது ராஜராஜ சோழன் கேரக்டரை செய்யவிருந்ததாகவும் கார்த்தி தெரிவித்தார்.
மேலும் தன்னை வந்தியத்தேவனாக பார்த்த தன்னுடைய அப்பா, தன்னை மக்கள் நியாபகம் வைத்துக் கொள்வதற்கு இந்த ஒரு கேரக்டர் போதும் என்று பாராட்டியதாக தெரிவித்தார். ஆனால் எதற்குமே ரியாக்ட் செய்யாத தன்னுடைய அம்மா, அப்பா படம் சூப்பர்ப்பா என்று கத்தி சொன்னது தன்னை ஆச்சரியப்படுத்தியதாக கார்த்தி மகழ்ச்சி தெரிவித்தார். தொடர்ந்து இந்தப் படம் குறித்து பாராட்டிய நடிகர் சூர்யா, அதிகமானவர்களை அழைத்து சென்று இந்தப் படத்தை பார்த்ததும் தனக்கு மகிழ்ச்சி அளித்ததாக கார்த்தி பகிர்ந்துக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











