பொன்னியின் செல்வன் அடுத்த கேரக்டர் நம்பி போஸ்டர்.. சரியான தொல்லை என்று சலித்துக் கொண்ட கார்த்தி!

சென்னை : பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்டமான ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நாளைய தினம் சென்னையில் நடைபெறவுள்ளது.

இதையொட்டிய ஏற்பாடுகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் லீட் கதாபாத்திரங்கள் அல்லாத அடுத்தடுத்த கேரக்டர்களை பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்டு வருகிறது.

நாவலாசிரியர் கல்கி

நாவலாசிரியர் கல்கி

பிரபல நாவலாசிரியர் கல்கியின் பிரம்மாண்டமான படைப்பு பொன்னியின் செல்வன். சோழர்களை அவர்களின் சிறப்பான ஆட்சியை மையப்படுத்தி தமிழில் வெளியான இந்த நாவலுக்கு அதன் கதையோட்டத்திற்கு மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அந்த நாவலை தன்னுடைய எழுத்து நடையால் பிரம்மாண்டப்படுத்தியிருப்பார் கல்கி.

மணிரத்னம் கனவு திரைப்படம்

மணிரத்னம் கனவு திரைப்படம்

இந்த நாவலை படிக்கும் யாரும் இது திரைப்படமாக வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையை தவிர்க்க முடியாது. அந்த வகையில்தான் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் முதல் அனைவரும் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். இயக்குநர் மணிரத்னமே முன்னதாக வேறு நடிகர்களை வைத்து திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

பிரம்மாண்ட படைப்பு

பிரம்மாண்ட படைப்பு

ஆனால் பல ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின்பு தற்போதுதான் அவருக்கு இந்த முயற்சி அமைந்துள்ளது. இறுதியில் தன்னுடைய கனவு படைப்பிற்கு திரைவடிவம் கொடுத்துவிட்டார் மணிரத்னம். அந்த வகையில் இவரது பிரம்மாண்டமான படைப்பாக பொன்னியின் செல்வன் படம் பாகம் ஒன்று செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

கேரக்டர் போஸ்டர்கள்

கேரக்டர் போஸ்டர்கள்

இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில், பார்த்திபன், ஜெயராம், ரகுமான், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் முக்கியமான ஆனால் சிறிய அளவிலான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

ஜெயராம் கேரக்டர் போஸ்டர்

ஜெயராம் கேரக்டர் போஸ்டர்

அந்த வகையில் தற்போது இவர்களின் போஸ்டர்களை பொன்னியின் செல்வன் குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. கடந்த இரு தினங்களாக, பார்த்திபன், ரகுமான், ஜெயசித்ரா, ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் போஸ்டர்கள் வெளியான நிலையில் இன்றைய தினம் ஜெயராமின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்தி கமெண்ட்

கார்த்தி கமெண்ட்

ஜெயராம் இந்த படத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். வித்தியாசமான கெட்டப்பில் ஜெயராம் காணப்படுகிறார். ஆனால் ரசிகர்களை கவரும் வகையில் இவரது கெட்டப் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த போஸ்டருக்கு நடிகர் கார்த்தி கமெண்ட் செய்துள்ளார்.

தொல்லை என கமெண்ட்

தொல்லை என கமெண்ட்

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா என்றும் உம்மை மட்டும் ப்ளாக் செய்யவும் முடியவில்லை ரிப்போர்ட் செய்யவும் முடியவில்லை சரியான தொல்லையப்பா என்றும் சலித்துக் கொண்டு கமெண்ட் செய்துள்ளார். அவரது இந்த கமெண்ட் ஜெயராமின் கேரக்டர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பிரம்மாண்ட இசை வெளியீடு

பிரம்மாண்ட இசை வெளியீடு

பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியீடு சென்னை மற்றும் ஐதராபாத்தில் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், நாளைய தினம் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஜினி மற்றும் கமல் பங்கேற்கவுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X