Japan :ஜப்பான் படத்தின் அடுத்த ஷெட்யூல் எப்ப துவங்குது தெரியுமா.. கார்த்தி வெயிட்டிங்!

சென்னை : கார்த்தி லீட் கேரக்டரில் நடித்துவரும் படம் ஜப்பான். இந்தப் படத்தை ராஜு முருகன் இயக்கி வருகிறார்.

கார்த்தியின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் ஜுன் 2ம் தேதி சென்னையில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Karthis Japan movie next schedule starts on June 2nd in chennai EVP

கார்த்தியின் ஜப்பான் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் :

நடிகர் கார்த்தியின் பொன்னியின் செல்வன் படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. படத்தில் வந்தியத் தேவனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் கார்த்தி. அந்தக் கேரக்டருக்கு அவர் மிகவும் சிறப்பாக பொருந்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் வசூல்ரீதியாக சாதனை புரிந்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடந்துவந்த நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங் வரும் ஜூன் 2ம் தேதி சென்னையில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை இவிபியில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு 25 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூட்டிங்கில் நடிகர் கார்த்தி கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரேகட்டமாக சூட்டிங்கை நடத்தி முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டீசர் உள்ளிட்டவற்றை பார்க்கும்போது, படத்தில் ஸ்டைலிஷ்ஷான கார்த்தியை பார்க்க முடியும் என்பது தெரியவருகிறது. படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். மேலும் படத்தில் சுனில், விஜய் மில்டன் போன்றவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

Actor Karthis Japan movie next schedule starts on June 2nd in chennai EVP

இதனிடையே படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவந்த ரவிவர்மன், தற்போது படத்திலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, சத்யன் சூர்யன் மாற்றப்பட்டுள்ளார். ரவிவர்மன், இந்தியன் 2 படத்திலும் பணியாற்றிவரும் சூழலில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் ஜப்பான் படத்திலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா படங்களுக்கு பெரிய போட்டியை இந்தப் படம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கார்த்தியின் அடுத்தப்படமான கார்த்தி 26 படம் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் படம் குறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கும், ஜப்பான் படத்தின் சூட்டிங்கும் ஒரே நேரத்தில் நடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்தி எப்போதும் தன்னுடைய அடுத்தடுத்தப் படங்கள் சரியான இடைவெளியில் ரிலீசாவதை உறுதி செய்து வருகிறார். கடந்த ஆண்டிலும் அவரது 3 படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீசாகி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X