கொடைக்கானலில் படமாக்கப்படும் ஜப்பான் சூட்டிங்.. கார்த்தி -விஜய் மில்டன் காம்பினேஷன் காட்சிகள்!
கொடைக்கானல் :கடந்த ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்த ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளார் நடிகர் கார்த்தி.
இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன்களில் விரைவில் அவர் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் ஜப்பான் படத்தின் சூட்டிங் கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி எப்போதுமே இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பேவரைட்டாக உள்ளார். இவரது நடிப்பில் ஒரு படத்தை இயக்கிவிட்டால் அவர் அடுத்தடுத்த படங்களில் இந்திய அளவில் மிகச்சிறந்த ரீச்சை பெற்று விடுவார் என்ற சென்டிமெண்ட் கோலிவுட்டில் வலுப்பெற்றுள்ளது. இதற்கு உதாரணமாக இயக்குநர் ரஞ்சித், லோகேஷ் கனகராஜ் என பட்டியல் நீண்டுள்ளது. தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

அடுத்தடுத்த ஹாட்ரிக் வெற்றி
கடந்த ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய படங்களில் நடித்திருந்தார் கார்த்தி. இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹாட்ரிக் வெற்றியை அவருக்கு கொடுத்துள்ளன. இதில் விருமன் படத்தை அவரது அண்ணன் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார். பருத்தி வீரன் படத்தை தொடர்ந்து கார்த்தி இந்தப் படத்தில் மீண்டும் கிராமத்து கெட்டப்பில் மிரட்டியிருந்தார். படத்தில் ஷங்கரின் மகள் அதிதி கார்த்திக்கு ஜோடியாகியிருந்தார்.

பொன்னியின் செல்வன் 2 படம்
இந்தப் படத்தை தொடர்ந்து வெளியான கார்த்தியின் பொன்னியின் செல்வன் படம், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருந்தது. இந்தப் படத்திலும் கார்த்தியின் வந்தியத்தேவன் கேரக்டர் மிகவும் பவர்புல்லாக அமைந்திருந்தது. இந்த படத்தின் அடுத்தபாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும் கார்த்தியின் கேரக்டர் பலம் வாய்ந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொடைக்கானலில் ஜப்பான் படத்தின் சூட்டிங்
இந்நிலையில் தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது கொடைக்கானலில் நடந்து வருகிறது. படத்தில் இயக்குநர் விஜய் மில்டன் இணைந்துள்ள நிலையில் இருவருடைய காம்பினேஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஷெட்யூலை முடித்துக் கொண்டு கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கார்த்தியின் வித்தியாசமான கெட்டப்
கார்த்தியின் 25வது படமாக ஜப்பான் படம் உருவாகி வருகிறது. முன்னதாக இந்தப் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்த போஸ்டர்களில் மிகவும் வித்தியாசமான லுக்கில் கார்த்தி காணப்பட்டார். வித்தியாசமான ஹேர்ஸ்டைல், கழுத்தில் டாலர் என வித்தியாசமான கார்த்தியை கடந்த பொங்கலையொட்டி வெளியான போஸ்டரில் காண முடிந்தது. இந்தப் போஸ்டர்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஜப்பான் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாகியுள்ளார் அனு இம்மானுவேல். படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். அடுத்தடுத்த ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ள கார்த்தியின் அடுத்தடுத்த பொன்னியின் செல்வன் மற்றும் ஜப்பான் படங்களும் தற்போது அதிகப்படியான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளன. தன்னுடைய சிறப்பான பர்பார்மென்சால் தன்னுடைய கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்துவரும் கார்த்தியின் இந்தப் படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications











