twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    121 நகரங்கள்... 297 திரைகள்... என்ன லிட்ஸ்ன்னு பார்க்கிறீர்களா?... வாங்க பார்க்கலாம்!

    |

    சென்னை : தமிழ் படங்கள் சர்வதேச தரத்தில் தற்போது வெளியாகி வருகின்றன. இளம் இயக்குநர்கள் தமிழ் சினிமாவிற்கு புதிய நம்பிக்கையை கொடுத்து வருகின்றனர்.

    திரைக்கதையில் மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர். தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகளில் இந்த அனுபவத்தை பல படங்களில் ரசிகர்கள் அனுபவத்து வருகின்றனர்.

    அந்த வகையில் தமிழில் உருவாகும் படங்கள் பல வெளிநாடுகளில் வெளியிடப்பட்டு சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகின்றன.

    ஒவ்வொரு வாரமும் களைகட்டும் ஓடிடி ரிலீஸ் படங்கள்... இந்த வாரம் என்னென்ன படங்கள்னு பாக்கலாமா? ஒவ்வொரு வாரமும் களைகட்டும் ஓடிடி ரிலீஸ் படங்கள்... இந்த வாரம் என்னென்ன படங்கள்னு பாக்கலாமா?

    மசாலா படங்கள்

    மசாலா படங்கள்

    தமிழ் படங்களில் பல படங்கள் மசாலாக்கள், காமெடி, ஆக்ஷனை நம்பியே தற்போதும் காணப்படுகின்றன. இதுபோன்ற படங்களில் வெற்றியை பெறுவது சற்று எளிதானது என்பதால் முன்னணி நடிகர்களும் இதுபோன்ற கதைகளையே தொடர்ந்து நம்புகின்றனர். அந்த வகையில் பல படங்களை சமீபத்திய உதாரணங்களாக காட்ட முடியும்.

    குடும்ப சென்டிமெண்ட்

    குடும்ப சென்டிமெண்ட்

    மேலும் குடும்ப சென்டிமெண்டும் இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் சிறப்பாக கைக்கொடுத்து வருகின்றன. ஆனாலும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டுவரும் இயக்குநர்கள் கோலிவுட்டில் புதிய வரவாக காணப்படுகின்றனர். இவர்களின் முயற்சிகள் இவர்களை ஒன்றிரண்டு படங்களிலேயே சர்வதேச அளவில் கவனிக்கவும் வைத்து வருகிறது.

    கார்த்தியின் கைதி படம்

    கார்த்தியின் கைதி படம்

    அந்த வகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு சிறையிலிருந்து விடுதலையாகி தன்னுடைய மகளை பார்க்கவரும் கார்த்தி, இடையில் பலரது வாழ்க்கையை காப்பாற்றும் சந்தர்ப்பத்தை எப்படி கையாள்கிறார் என்ற கதைக்களத்தில் இந்தப் படம் வெளியானது.

    கதையை நம்பிய படம்

    கதையை நம்பிய படம்

    படத்தில் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக அமைந்தது. லாரி ஓட்டுவதற்காக வரும் கார்த்தி, தொடர்ந்து காவல்துறையினரையும் காப்பாற்றி, தன்னுடைய மகளுடன் சேரும் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிகமான பொருட்செலவு, பிரம்மாண்டம் போன்ற எதுவும் இல்லாமல் இந்தப் படத்தில் கதையை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியிருந்தார் லோகேஷ்.

    ரஷ்யாவில் கைதி படம்

    ரஷ்யாவில் கைதி படம்

    இந்நிலையில் இந்தப் படம் தற்போது ரஷ்யாவில் திரையிடப்பட்டுள்ளது. அந்த மொழியிலேயே இந்தப் படம் 121 நகரங்களில் 297 திரைகளில் இன்று முதல் திரையிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்ப்படம் ஒன்று மற்றொரு நாட்டில் திரையிடப்பட்டு தமிழ் திரையுலகிற்கு பெருமையை சேர்த்துள்ளது.

    சீனாவில் ரிலீசான கனா படம்

    சீனாவில் ரிலீசான கனா படம்

    ஒரு படத்திற்கு தேவை படத்தின் எளிதான திரைக்கதையே என்பதை இந்தப் படம் நிரூபித்துள்ளது. இந்தப் படத்தின் மிரட்டலான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் ரஷ்ய மொழி பேசும் ரசிகர்களையும் கவரும் என்று நம்பலாம். சமீபத்தில் சிவகார்த்திகேயனின் கனா படம் சீனாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    லோகேஷ் வீடியோ மெசேஜ்

    இந்நிலையில் இந்தப் படத்தின் தற்போதைய ரஷ்ய ரிலீஸ் குறித்து படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ரஷ்ய ரசிகர்களுக்கு அவர் வீடியோ மூலம் மெசேஜ் ஒன்றை தெரிவித்துள்ளார். இந்தப் படம் மனதிற்கு மிகவும் நெருக்கமானது என்றும் படத்தை எடுக்க மிகவும் கடுமையான உழைப்பை தங்களது படக்குழு மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

    English summary
    Actor Karthi's Kaithi movie released in Russia in 121 cities
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X