அண்ணன் தயாரிக்கும் படத்தில் தம்பி ஹீரோ! - பாண்டிராஜ் இயக்கும் படம் தொடங்கியது!
சென்னை : பசங்க படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். முதல் படத்திலேயே தேசிய விருதுகளைக் குவித்தவர், அதன்பின்னர் சில படங்களை இயக்கினார். இவரது இயக்கத்தில், கடைசியாக சிம்பு - நயன்தாரா நடிப்பில் 'இது நம்ம ஆளு' ரிலீஸானது.
தற்போது கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் பாண்டிராஜ். இப்படத்தை கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யா, தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக, 'வனமகன்' ஹீரோயின் சாயிஷா நடிக்கிறார்.

இவர்களுடன் சத்யராஜ், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், பானுப்ரியா, இளவரசு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படம் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகிறது.
இந்தப் படத்தின் பூஜை முறைப்படி இன்று (நவம்பர் 9) துவங்கியது. சூர்யாவின் தாயார் லட்சுமி சிவகுமார் குத்துவிளக்கேற்றி படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து சென்னையில் 5 நாட்களும், அதனைத்தொடர்ந்து தென்காசியில் 40 நாட்களும் படப்பிடிப்பு நடக்கிறது.
அடுத்த வாரம், கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் 'தீரன் அதிகாரம் ஒன்று' வெளியாக இருக்கும் நிலையில், தற்போது தனது அடுத்த படத்தைத் தொடங்கியிருக்கிறார் கார்த்தி.


Click it and Unblock the Notifications











