நரைத்த தாடி நீண்ட தலைமுடி... வித்தியாசமான தோற்றத்தில் கார்த்தி… வெளியானது சர்தார் மோஷன் போஸ்டர் !

சென்னை : கார்த்திக் நடிக்கும் சர்தார் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

இப்படத்தை இரும்புதிரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கி உள்ளார்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வசூல் சாதனை

வசூல் சாதனை

ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, நெப்போலியன் உள்ளிடோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சுல்தான். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் வசூலைக் குவித்து வெற்றிப்படமாக அமைந்தது.

தாடி, மீசையில்

தாடி, மீசையில்

சுல்தான் படத்தின் பணிகளை முடித்த கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்காக தாடி, மீசை எனலுக்கில் வித்தியாசம் காட்டியிருந்தார் கார்த்தி, அதே தோற்றத்தில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில்நடித்திருக்கிறார்.

நரைத்த தாடி நீண்ட தலைமுடி

நரைத்த தாடி நீண்ட தலைமுடி

சர்தார் என பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அதில் நரைத்த தாடி, நீண்ட தலைமுடி, சுருங்கிய முகத்துடன் வயதான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார் கார்த்தி. இந்த திரைப்படம் கார்த்தியின் 22வது திரைப்படமாகும். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் கர்ணன் பட நாயகி ரஜிஷா விஜயன் நடிக்க உள்ளனர்

ஜிவி பிரகாஷ் இசையில்

ஜிவி பிரகாஷ் இசையில்

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். மேலும் இந்த படத்தை ப்ரிஸ் பிச்சர்ஸ் சார்பாக லட்சுமன் குமார் தயாரிக்க உள்ளார். திலீப சுப்புராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X