மிரட்டலான படத்தில் நாட்டுப்புற பாடல்.. சர்தார் படத்திற்காக கலக்கலாக பாடிய நடிகர் கார்த்தி!

சென்னை : நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன் படங்கள் சிறப்பான வெற்றியை அவருக்கு பெற்றுத் தந்துள்ளன.

அடுத்ததாக வரும் 21ம் தேதி தீபாவளியையொட்டி சர்தார் படம் வெளியாகவுள்ளது. இதற்கான பிரமோஷன்களை படக்குழு துவங்கியுள்ளது.

இந்நிலையில் படத்தில் ஏறுமயிலேறி என்ற பாடல் இன்றைய தினம் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது.

 நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி சிறப்பான பல கதைக்களங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவருக்கு எந்த கேரக்டரானாலும் சிறப்பாக பொருந்துகிறது. சாக்லேட் பாயாகவும் கைதியாகவும், காவல்துறை அதிகாரியாகவும் எதுவாக இருந்தாலும் இவருக்கு சிறப்பாக பொருந்தி வருகிறது.

கார்த்தியின் கைதி படம்

கார்த்தியின் கைதி படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் இவருக்கு சிறப்பாகவே கைக்கொடுத்தது. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக விக்ரம் படத்திலும் ஆடியோவில் மட்டும் இவரை காண முடிந்தது. தொடர்ந்து விருமன் என்ற படத்தில் கிராமத்து கெட்ப்பில் பட்டையை கிளப்பினார்.

விருமன் பட கேரக்டர்

விருமன் பட கேரக்டர்

இந்தப் படத்தில் உறவுகளுக்கு கைக்கொடுக்கும் விருமன் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதீதி ஷங்கர் கார்த்திக்கு ஜோடி சேர்ந்திருந்தார். சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரன், மைனா, மனோஜ் என இந்தப் படத்தின் அனைத்து கேரக்டர்களும் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

இந்தப் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவனாக கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கார்த்தி. இந்தக் கேரக்டரில் முன்னதாக நடிகர் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டவர்கள் நடிக்கவிருந்த நிலையில், அந்தக் கேரக்டர் தற்போது கார்த்திக்கு அமைந்தது. அதை சிறப்பாகவே பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார் கார்த்தி.

21ம் தேதி வெளியாகும் சர்தார்

21ம் தேதி வெளியாகும் சர்தார்

இதையடுத்து வரும் 21ம் தேதி கார்த்தியின் சர்தார் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் கார்த்தி. வயதான தோற்றத்திலும், காவல்துறை அதிகாரியாகவும் கார்த்தி நடித்துள்ள கேரக்டர்கள் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் இதை அழகாக வெளிப்படுத்தியுள்ளது.

மிரட்டிய சர்தார் டீசர்

மிரட்டிய சர்தார் டீசர்

படத்தில் பலவிதமான கெட்டப்புகளில் கார்த்தியை காண முடிந்தது. இந்நிலையில் அடுத்ததாக படத்தின் பிரமோஷனின் ஒரு பகுதியாக ஏறுமயிலேறி என்ற நாட்டுப்புற பாடல் இன்றைய தினம் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் மேடையில் ஏறி பலவிதமான கெட்டப்புகளில் அவர் நடிக்கும்வகையில் காணப்படுகிறது.

சொந்தக்குரலில் பாடிய கார்த்தி

சொந்தக்குரலில் பாடிய கார்த்தி

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை கார்த்தியே தனது சொந்தக்குரலில் பாடியுள்ளது பாடலின் மற்றொரு சிறப்பாக காணப்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கார்த்தியின் இந்தப் பாடலின் பிரமோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதில் பாடலை பாடும் கார்த்தியின் வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தது.

தேர்ந்த பாடகராக மாறிய கார்த்தி

தேர்ந்த பாடகராக மாறிய கார்த்தி

இந்தப் பாடலை தேர்ந்த பின்னணி பாடகரைப் போல கார்த்தி பாடியுள்ளார். இநத்ப் படம் இன்னும் சில தினங்களில் வெளியாகி வெற்றியடையும் பட்சத்தில் அது கார்த்திக்கு ஹாட்ரிக்காக அமையும். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்பதில மாற்றுக் கருத்தில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X