2வது வாரத்தில் 100 கோடியை நெருங்கும் சர்தார் படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

சென்னை : நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசானது சர்தார் படம். தீபாவளியையொட்டி வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

த்ரில்லர் வகையில் வெளியான சர்தார் படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். படமும் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்தது.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துடன் மோதிய சர்தார் வசூல் சாதனை புரிந்தது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது.

கார்த்தியின் சர்தார் படம்

கார்த்தியின் சர்தார் படம்

நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துடன் இணைந்து கார்த்தியின் சர்தார் படமும் திரையரங்குகளில் ரிலீசானது. முன்னதாக அவரது விருமன், பொன்னியின் செல்வன், படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையில் தீபாவளியையொட்டி சர்தார் படமும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

கார்த்தியின் ஹாட்ரிக் வெற்றி

கார்த்தியின் ஹாட்ரிக் வெற்றி

இந்தப் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது.அடுத்ததாக அவரது ஜப்பான் படத்தின் சூட்டிங்கும் ராஜு முருகன் இயக்கத்தில் விரைவில் துவங்கவுள்ளது. இதனிடையே இந்த மூன்று படங்களின் வெற்றியும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

த்ரில்லர் வகை படம்

த்ரில்லர் வகை படம்

த்ரில்லர் வகை பட வரிசையில் இந்தப்படம் வெளியாகியுள்ளது. விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என மூன்ற படங்களும் மூன்று ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்ததாக வெளியாகவுள்ள ஜப்பான் படமும் அரசியல் களத்தில் வெளியாகவுள்ளது. இதனிடையே சர்தார் படம் இரண்டாவது வாரத்தில் நடைபோட்டு வருகிறது. படத்தின் வசூல் தற்போது 100 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

ரூ. 100 கோடி கிளப்

ரூ. 100 கோடி கிளப்

இதனால் படக்குழு மட்டுமல்ல ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மிகுந்த சிரத்தையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் இயக்குநர் பிஎஸ் மித்ரன் ஸ்கோர் செய்துள்ளார்.

சிறப்பான கேரக்டர்கள்

சிறப்பான கேரக்டர்கள்

கார்த்திக்கு ஒவ்வொரு கேரக்டர்களும் சிறப்பாக பொருந்துகின்றன. சமீபத்தில் இந்த ஹாட்ரிக் வெற்றிக்கு முன்பு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் அடுத்த பாகம் விரைவில் துவங்கவுள்ளது.

 கைதி 2 படம்

கைதி 2 படம்

விஜய்யின் தளபதி 67 படத்திற்கு பிறகு இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆயுள் தண்டனை கைதியாக அனாதை இல்லத்தில இருக்கும் தன்னுடைய மகளை தேடி வரும் சூழலில் போலீசாரின் பிரச்சினையில் உதவும் கைதியாக அவர் நடித்திருந்தார். மிகப்பெரிய வரவேற்பை இந்தப் படம் பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X