லேசாக கோப்ரா வாடை அடிக்கிறதே.. சர்தார் டீசர்... 6 கெட்டப்புகளில் மிரட்டும் கார்த்தி!

சென்னை : நடிகர் கார்த்தியின் சர்தார் படம் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ள நிலையில் சர்தார் படமும் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விருமன், பொன்னியின் செல்வன் படங்களில் சிறப்பான பிரமோஷனலில் ஈடுபட்ட கார்த்தி, சர்தார் படத்திற்கும் அதே உற்சாகத்துடன் செயல்படுவார் என எதிர்பார்க்கலாம்.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி தொடர்ந்து தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களின் விருப்பமான ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். ஒரு படத்தை கமிட் செய்தால், அதை சிறப்பான ஒத்துழைப்போடு முடித்துக் கொடுப்பதோடு, பிரமோஷன்களிலும் நல்ல பங்களிப்பை கொடுப்பது கார்த்தி ஸ்டைல்.

விருமன் படம்

விருமன் படம்

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விருமன் படத்தை இவரது அண்ணன் சூர்யாவே தயாரித்திருந்தார். படத்தில் கிராமத்து கெட்டப்பில் கார்த்தி நடித்திருந்த நிலையில், அவரை இரண்டாவது முறையாக முத்தையா இயக்கியிருந்தார். இரண்டாவது முறையாக முத்தையா -கார்த்தி கூட்டணி இந்தப் படத்தில் இணைந்திருந்தது.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

தற்போது கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தியின் நடிப்பு சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. காதல், ஆக்ஷன் என அனைத்து தளங்களிலும் வர் றிப்பாக நடித்துள்ளதாக விமர்சனங்ஙகள் எழுந்துள்ளன.

சர்தார் படத்தின் டீசர்

சர்தார் படத்தின் டீசர்

இந்தப் படத்தின் இடையில் நேற்று மாலை ரசிகர்களுக்கு திடீர் சர்ப்பிரைசாக அவரது சர்தார் படத்தின் டீசர் வெளியானது. தீபாவளியையொட்டி வெளியாக உள்ள இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாகவும் வயதான கேரக்டரிலும் நடித்துள்ளார் கார்த்தி. இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

6 விதமான கெட்டப்புகள்

6 விதமான கெட்டப்புகள்

இந்தப் படத்தில் ஆறு விதமான கெட்டப்புகளில் கார்த்தி நடித்துள்ளார். இந்த கெட்டப்புகளில் மிரட்டலான கார்த்தியை பார்க்க முடிகிறது. ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், கார்த்திக்கும் அழகான ஒரு பிளாஷ்பேக் காணப்படுகிறது. இவருக்கு படத்தில் சர்தார் என்பது கோட் நேமாக குறிப்பிடப்படுகிறது.

கோப்ரா படத்துடன் கம்பேர்

கோப்ரா படத்துடன் கம்பேர்

இதனிடையே இந்தப் படத்தை சமீபத்தில் வெளியான விக்ரமின் கோப்ரா படத்துடன் ரசிகர்கள் கம்பேர் செய்து வருகின்றனர். அந்தப் படத்திலும் விதவிதமான கெட்டப்புகளில் விக்ரம் மிரட்டுவார். அவருக்கும் கோப்ரா என்பது ஒரு கோட் நேமாகவே இருக்கும். கோப்ராவிற்கும் பழிவாங்குவதற்கான பிளாஷ்பேக் காணப்படும் நிலையில், கோப்ரா மற்றும் சர்தார் படங்கள் ஒரே மாதிரியாக இருக்குமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X